“மற்ற தூயவர்களுக்கு, சில குறிப்பிட்ட தேவைகளுக்காக மட்டுமே இறைவன் அருள் புரிவார் என வெளிப்படுகிறது. ஆனால், தூய யோசேப்பில், அனுபவம் புலப்படும் வகையில், அனைத்து வித தேவையிலும் சூழ்நிலையிலும் இறைவன் அவர் வழி அருள் புரிபவராக விளங்குகிறார்.”
நமது ஆண்டவர் கற்பிப்பது யாதெனில், மண்ணகத்தில் தூய யோசேப்பின் குறிப்பிடமாக விளங்கி மகிழ்வதால், (லூக்கா 2:51), இங்கே விண்ணகத்திலும் தூய யோசேப்பு பரிந்துரைக்கும் அனைத்தையும் மகிழ்வுடன் நிறைவேற்றுகிறார்.
அண்மைய நூற்றாண்டுகளில், தூய யோயேப்பு, நாசரெத்தூரின் கட்டுனர்/எழுப்புணராகவும், பெரும்பாலும் மனை, நில விற்பனையின் பாதாகாவலாராக அறியப்படுகிறார், முக்கியமாக, வீடு, மனை விற்பனையில் அவரின் பரிந்துரை பரவலாக தேடப்பட்டது.
தூய யோசேப்பிடம் மன்றாட்டு
ஓ மாட்சி நிறைந்த தூய யோசேப்பே… இயேசுக் கிறித்துவின் நம்பிக்கை நிறைந்த சீடரே… எங்களின் ஆன்ம மற்றும் தற்காலிக தேவைகளுக்காக, இயேசுவின் இரக்கமுள்ள இதயத்திலிருந்து தேவைப்படும் உதவியையும் அருளையும் உமது வல்லமையுள்ள பரிந்துரையின் வழிப் பெற்று தந்திட எங்களின் இதயத்தையும் கைகளையும் உம்மை நோக்கி உயர்த்துகிறோம்.
குறிப்பாக, நல்ல மகிழ்வான இறப்பிற்காகவும், மற்ரும் இப்பொழுது நாங்கள் வேண்டி நிற்கும் தனிப்பட்ட கருத்திற்காகவும்.
(இங்கே உங்கள் தேவைகளை குறிப்பிடவும்)…
மனுவருவான வார்த்தையின் பாதூகாவலரே,
நாங்கள் முன்னெடுக்கும் எங்களின் பரிந்துரை, எங்களின் சார்பாக உமது வல்லமைமிகு பரிந்துரையால் இறைவனின் அரியணை முன் கனிவுடன் கேட்கப்படும் என்னும் துணிவுடன் நாங்கள் நிறைவுக் கொள்கிறோம்.
ஓ மாட்சிமிகு தூய யோசேப்பே,
எங்கள் மன்றாட்டுக்கு செவிசாய்த்து,
எங்கள் விண்ணப்பத்தை பெற்று தாரும்.
இப்படிக்கு,
பணி ஓய்வுப் பெற்ற அருட்பணி.தந்தை.அகஃத்தின் வோங்
Church of the Holy Name of Mary is a Roman Catholic Church situated at Permatang Tinggi. Our mission is to share the Good News of the Kingdom of God to everyone.