இறைவனில் நம்பிக்கையும், அவரில் விசுவாசத்தையும் மற்ரும் அவரின் வாக்குறுதியில் நம்பிக்கையையும் கொண்டவர்களாய் இந்த 2024 பறவை நாகத்தின் புது ஆண்டு நிச்சயம் வளமையும் மற்ரகும் நிறைவைத் தரும் ஆண்டாய் விளங்கும்.
“இந்தத் திருச்சட்ட நூலை உன் முன்னின்று அகற்றாதே. இரவும் பகலும் இதனைத் தியானம் செய்து, இதில் எழுதியுள்ள அனைத்தையும் கடைப்பிடிப்பதில் கவனமாய் இரு. அப்பொழுது தான் நீ செல்லும் இடம் எல்லாம் நலம் பெறுவாய்; வெற்றி காண்பாய். நான் உனக்குக் கட்டளையிடவில்லையா? வீறுகொள்! துணிந்து நில்! அஞ்சாதே! கவலைப்படாதே! ஏனெனில் உன் கடவுளும் ஆண்டவருமான நான் நீ செல்லும் இடம் எல்லாம் உன்னோடு இருப்பேன்.” (யோசுவா 1:8-9).
பறவை நாகத்தின் 2024-ம் புது ஆண்டின் ஆசீர்.
இந்த 2024-ம் பறவை நாகத்தின் ஆண்டில்…
“ஆண்டவர் உனக்கு ஆசி வழங்கி உன்னைக் காப்பாராக!
ஆண்டவர் தம் திருமுகத்தை உன்மேல் ஒளிரச்செய்து உன்மீது அருள் பொழிவாராக!
ஆண்டவர் தம் திருமுகத்தை உன் பக்கம் திருப்பி உனக்கு அமைதி அருள்வாராக!” (எண்ணிக்கை 6:24-26).
உங்கள் அனைவருக்கும்,
மகிழ்ச்சி, நலம், வளமை மற்றும் நிறைவை அளிக்கும் 2024 பறவை நாகத்தின் பது ஆண்டு வாழ்த்துகள்.
இப்படிக்கு,
பணி ஓய்வுப் பெற்ற அருட்பணி.தந்தை.அகஃத்தின் வோங்
Church of the Holy Name of Mary is a Roman Catholic Church situated at Permatang Tinggi. Our mission is to share the Good News of the Kingdom of God to everyone.