“நெற்றி வியர்வை நிலத்தில் விழ உழைத்து உன் உணவை உண்பாய்.” ( தொநூ 3:19 )
“ஆண்டவரே வீட்டைக் கட்டவில்லையெனில்,
அதைக் கட்டுவோரின் உழைப்பு வீணாகும்;
ஆண்டவரே நகரைக் காக்கவில்லையெனில்,
காவலர்கள் விழித்திருப்பதும் வீணாகும்.
( திபா 127:1 )
“எம் கடவுளாம் தலைவரின் இன்னருள் எம்மீது தங்குவதாக!
நாங்கள் செய்பவற்றில் எங்களுக்கு வெற்றி தாரும்!
ஆம், நாங்கள் செய்பவற்றில் வெற்றியருளும்!! (திபா 90:17)
“உமது உழைப்பின் பயனை நீர் உண்பீர்! நீர் நற்பேறும் நலமும் பெறுவீர்!”(திபா 127:2)
“சிந்தனையிலும் உடலிலும் தவறாத நலத்தை அடைந்திட
ஆண்டவர் உனக்கு ஆசி வழங்கி உன்னைக் காப்பாராக!
தொழில் புரியும் இடத்தில் நீங்கள் பாதூகாப்புடன் விளங்கிட
ஆண்டவர் தம் திருமுகத்தை உன்மேல் ஒளிரச்செய்து உன்மீது அருள் பொழிவாராக!
தூய ஆவியாரின் கணிகளாலும் கொடைகளாலும் உங்களை நிரப்பி
இந்த 2024-ம் பறவை நாகத்தின் புதிய ஆண்டில்
நீங்கள் செயல் புரியும் அனைத்திலும்
வளமையும் வெற்றியும் அடைந்திட
ஆண்டவர் தம் திருமுகத்தை உன் பக்கம் திருப்பி
உனக்கு அமைதி அருள்வாராக! ”(எண் 6:24-26)
இப்படிக்கு,
பணி.ஓய்வுப் பெற்ற அருட்பணி.தந்தை.அகஃத்தின் வோங்
Church of the Holy Name of Mary is a Roman Catholic Church situated at Permatang Tinggi. Our mission is to share the Good News of the Kingdom of God to everyone.