இறைவனின் வார்த்தை நம் வாழ்வின் அனைத்து பகுதிகளிலும் தாக்கத்தை அளிக்கிறது

“என் காலடிக்கு உம் வாக்கே விளக்கு! என் பாதைக்கு ஒளியும் அதுவே!” திபா 119:105

எதிர்மறையான எண்ணங்கள், வார்த்தைகள், மனநிலை மற்றும் உறவுகளின் நிலையில் அழுத்தம் தரலாம். அவ்வழுத்தம், நோயினை கொணரலாம்.

நேர்மறையான எண்ணங்கள், வார்த்தைகள், மனநிலைகள் மற்றும் உறவுகள் நலத்தையும் குணமளிப்பையும் கொண்டு வரும்.

பின்வரும் இறைவார்த்தையை கருத்தில் கொள்ளவும்.

1. மன அமைதி உடல் நலம் தரும்; சின வெறியோ எலும்புறுக்கியாகும். நீமொ 14:30

2. பிள்ளாய்! என் வார்த்தைகளுக்குச் செவிகொடு; நான் சொல்வதைக் கவனி.

அவற்றைத் தேடிப் பெறுவோருக்கு அவை உயிரளிக்கும்; அவர்களுக்கு உடல் நலமும் தரும். நீமொ 4:20, 22

3. இன்சொற்கள் தேன்கூடு போன்றவை; மனத்திற்கு இனிமையானவை, உடலுக்கு நலம் தருபவை. நீமொ 16:24

நம் வாழ்வில் இறைவனின் வல்லமைக்காக நாம் நன்றிக் கூறுவோம். இறைவார்த்தையை தியானிப்பதும் மற்றும் இறைவனின் கட்டைளைகளை பின்பற்றுவதும் நம்மை சிந்திக்க, பேசுவது மற்றும் நமது வாழ்வில் ஒவ்வொரு பகுதிகளிலும் குணமளிப்பைக் கொண்டு வரும்.

நன்றியின் மன்றாட்டு

ஆண்டவராகிய இறைவா, உமது வார்த்தைக்காகவும் அவ்வார்த்தை என் வாழ்வில் கொண்டு வந்த குணமளிப்பிற்காகவும் நான் நன்றி நவில்கிறேன். என் எண்ணத்திற்காகவும், வார்த்தைக்காவும், மனநிலைக்காகவும் மற்றும் உறவுகள் அனைத்தும் இறைவார்த்தையின் மூலமாக நீர் தந்த மாற்றங்களுக்காக நான் மிகவும் கனிவாக உணர்கிறேன்.

இப்படிக்கு,

பணி ஓய்வுப் பெற்ற அருட்பணி.தந்தை.அகஃத்தின் வோங்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Church of the Holy Name of Mary is a Roman Catholic Church situated at Permatang Tinggi. Our mission is to share the Good News of the Kingdom of God to everyone. 

Resources