2025-ம்ஆண்டுக்குள்காலடிவைத்தல்

எதிர்நோக்கின் யூபிலி ஆண்டு : “அந்த எதிர்நோக்கு ஒருபோதும் ஏமாற்றம் தராது.” உரோமையர் 5:5

இதோ, நான் கதவு அருகில் நின்று தட்டிக்கொண்டிருக்கிறேன். யாராவது எனது குரலைக் கேட்டுக் கதவைத் திறந்தால், நான் உள்ளே சென்று அவர்களோடு உணவு அருந்துவேன்; அவர்களும் என்னோடு உணவு அருந்துவார்கள்.” திருவெளிப்பாடு 3:20

ஆம், விரைவாகவே வருகிறேன்!” திருவெளிப்பாடு 22:20

நீரே என் ஆண்டவர்! நீரே என் கடவுள்யோவான் 20:28

ஆண்டவராகிய இயேசுவே,

நான் திரும்பிட விரும்புகிறேன்!

மீண்டும் உம்முடன் நெருக்கமாக இணைந்து நடந்திட நான் விரும்புகிறேன்.

தயவுடன் என் பாவங்களை மன்னியும்.

ஒவ்வொரு நாட்களின் பாதையிலும் விசுவாசத்துடனும் மற்றும் ஒவ்வொரு நாளும் உம்முடன் இணைந்து நடந்திடும் அருளை எமக்கு அளிம்

உமது கரத்தில் மீண்டும் அனைத்தையும் நான் ஒப்படைக்கவுள்ளேன். என் அனைத்து விருப்பங்கள் மற்றும் உம்மில் என் புதிய நம்பிக்கையையும் நான் முழுவதுமாய் அர்ப்பணிக்கின்றேன்.    

கிறித்துவில் எங்கள் நம்பிக்கையை வைப்பதன் வழி, எங்கள் இதயங்களில் புதுமையானதும் வல்லமையானதுமான ஒன்று பிறந்துள்ளது! எதிர்நோக்கு.

தனிநபரான நமக்கும் மற்றும் திருஅவைக்கும் இனஅறு எதிர்நோக்கு அடிப்படையாகிறது.

கிறித்துவினால் நாம் கொள்ளும் எதிர்நோக்கானது, இங்கு மற்றும் இப்பொழுது அளவற்ற, வளமான மற்றும் நிறைவான வாழ்வை வாழ்வதற்கு மாற்றங்களை ஏற்படுத்தும் ஒரு ஆற்றலை, மகிழ்வை மற்றும் தன்னம்பிக்கையை  வெளியிடுகிறது.

நம்பிக்கை என்பது செவிமடுப்பதன் வழியாக வருகிறது. எதிர்நோக்கும் அப்படியே. இறைவார்த்தைக்கு செவிமடுப்பதும் மற்றும் கிறித்துவின் அருமையான வாக்குறுதிகளை மற்றும் வல்ல செயல்களை கண்டுணருவதும் நம் நம்பிக்கை மற்றும் எதிர்நோக்கை அதிகரிக்கிறது.

இயேசுவையும் அவர் வார்த்தையை அறிவதும் நம்மை நம்பிக்கைக் கொள்ளவும் மற்றும் எதிர்நோக்குவும் அதிகமாக உதவுகிறது.

மன்றாட்டில் ஆண்டவர் இயேசுவுடன் இணைந்திருப்பது, சக கிறித்துவர்களோடு நட்புறவுக் கொள்வது மற்றும் குறிப்பாக நற்கருணையில் இணைந்திருப்பது அவரில் நம் நம்பிக்கையையும், அவரில் நம் உறைவையும் வளர்த்து மேம்படுத்த உதவுகிறது.

இப்படிக்கு,

பணி ஓய்வுப் பெற்ற அருட்பணி.தந்தை.அகஃத்தின் வோங்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Church of the Holy Name of Mary is a Roman Catholic Church situated at Permatang Tinggi. Our mission is to share the Good News of the Kingdom of God to everyone. 

About us

Resources