எதிர்நோக்கின்2025 யூபிலிஆண்டு: “அந்தஎதிர்நோக்கு (இயேசுவில்நம்பிக்கைவைத்தல்) ஒருபோதும்ஏமாற்றம்தராது.” உரோமையர்5:5

“மக்களெல்லாரும் திருமுழுக்குப் பெறும் வேளையில் இயேசுவும் திருமுழுக்குப் பெற்று, இறைவனிடம் வேண்டிக் கொண்டிருந்தபோது வானம் திறந்தது. தூய ஆவி புறா வடிவில் தோன்றி அவர்மீது இறங்கியது. அப்பொழுது, "என் அன்பார்ந்த மகன் நீயே, உன்பொருட்டு நான் பூரிப்படைகிறேன்" என்று வானத்திலிருந்து ஒரு குரல் ஒலித்தது.” லூக்கா 3:21-22

இயேசுவை நீரே என் ஆண்டவர்! நீரே என் கடவுள்!” யோவான் 20:28-ல், என நம்புவதிலும் ஏற்பதிலும் நாம் இறைவனின் பிள்ளைகளாகிறோம். “அவரிடம் நம்பிக்கை கொண்டு அவரை ஏற்றுக்கொண்ட ஒவ்வொருவருக்கும் அவர் கடவுளின் பிள்ளைகள் ஆகும் உரிமையை அளித்தார்.” யோவான் 1:12. “நாம் பிள்ளைகளாயின், உரிமைப் பேறு உடையவர்களாய் இருக்கிறோம். ஆம், நாம் கடவுளிடமிருந்து உரிமைப் பேறு பெறுபவர்கள், கிறிஸ்துவின் பங்காளிகள். அவருடைய துன்பங்களில் நாம் பங்கு பெற வேண்டும்; அப்போதுதான் அவரோடு மாட்சியிலும் பங்கு பெறுவோம். (அவரின் தவறாத மீட்கும் அன்பு, உண்மை மற்றும் வல்லமை).” உரோமையர் 8:17

எனவே, “இறைவனின் பிள்ளைகளாகமற்றும் இறைவனின் உரிமைப் பேறுகளாக”, நாம் மனஅறாடும் போதெல்லாம், வானகம் திறக்கின்றது. ஆவியானவர், உடலின் அமைப்பில், அவர் மீது (நம்மீது) புறாவைப் போல் இறங்குகிறார். தூய ஆவி புறா வடிவில் தோன்றி அவர்மீது இறங்கியது. அப்பொழுது, “என் அன்பார்ந்த மகன் நீயே, உன்பொருட்டு நான் பூரிப்படைகிறேன்என்று வானத்திலிருந்து ஒரு குரல் ஒலித்தது. லூக்கா 3:21-22

தமது அன்பார்ந்த மகன்மகள் எனும் இறைவனின் ஏற்புடைமையும் உறுதியும் நமது தேவையையும் மரியாதையையும் சந்திக்கிறது. நாம் செயல் புரியும் அனைத்திலும் வளத்தையும் வெற்றியையும் காண நாம் நமது வாழ்வில் சிறப்பாக செயல்பட வேண்டும்.

எதிர்நோக்கில் நம்மை வலுவூட்டி நம்மை தவறாது ஏற்ற இறைவனுக்கு புகழ்ச்சியும் நன்றியும் அளித்து வளமான மற்றும் நிறைவான வாழ்வை வாழ்வோம்.

எதிர்நோக்கைத் தரும் கடவுள், நம்பிக்கையால் உண்டாகும் பெருமகிழ்ச்சியாலும், அமைதியாலும் உங்களை நிரப்புவாராக! அவ்வாறு தூய ஆவியின் வல்லமையால் நீங்கள் இன்னும் மிகுதியான எதிர்நோக்குடன் வாழ அருள்புரிவாராக.” உரோமையர் 15:13

இப்படிக்கு,

பணி ஓய்வுப் பெற்ற அருட்பணி.தந்தை.அகஃத்தின் வோங்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Church of the Holy Name of Mary is a Roman Catholic Church situated at Permatang Tinggi. Our mission is to share the Good News of the Kingdom of God to everyone. 

About us

Resources