அச்சத்தில் வாழ மறுத்தல்

"ஆண்டவரே உனக்குமுன் செல்வார். அவர் உன்னோடு இருப்பார். அவர் உன்னை விட்டு விலக மாட்டார். அவர் உன்னைக் கைவிடவும் மாட்டார் அஞ்சாதே, திகைக்காதே!" (இணை சட்டம் 31.8).

யோசுவாவிடம் அச்சம் கொள்ள வேண்டாம் என்று ஆண்டவர் கூறிய பொழுது, அவர் அச்சம் தரும் உணர்வை அவருக்கு கட்டளையிடவில்லை. மாறாக, அவர் எதிர்கொள்ளும் அச்சத்திடம் வீழ்ந்திடாமல் இருக்கவே அவர்  கூறினார். 

“அது அச்சம் அளிக்கிறதா…”. இது அடிப்படையில்  என்ன பொருள் தருகிறது என்றால், அச்சம் உங்களை தாக்கும் பொழுது, நீங்கள் அதை முன்னேறி சென்று செய்ய வேண்டிய  விடயத்தை முடித்திட வேண்டும். உங்களின் முழங்க்கால்கள் நடுங்கினாலும், அல்லது உங்களின் உள்ளங்கை வியர்த்து கொட்டினாலும் நீங்கள் அதை  நிறைவு செய்தே ஆக வேண்டும். இது தான், அச்சம் கொள்ளாதே என்பதின் உண்மையான பொருள்.

நாம் அச்சம் கொள்ளும்  பொழுதெல்லாம் நாம் தியானிக்க நமக்கு திருவிவிலியம் உள்ளது என்று நன்றியுணர்வுக் கொள்ளலாம். நாம் எப்படி உணர்ந்தாலும், நாம் முன்னேறி செல்வதற்கு, இறைவனின் வாக்குறுதி நம்மை அழுத்துகிறது. 

 அச்சத்தின் எவ்வித உணர்வையும் நீங்கள் கடந்து முன்னே வர, இறைவனின் வார்த்தை உங்களுக்கு விசுவாசத்தை அளிக்கும்.

நன்றியின் மன்றாட்டு.

எல்லாம் வல்ல ஆண்டவரே மற்றும் இறைவனே,

உமக்கு நன்றி.

ஏனெனில், நான் அச்சத்தின் உணர்விற்குள் செல்லாமல் இருந்திட செய்தீர்.

.

உமது உதவியால், எனது உணர்விற்குள் நான் முன்னெடுத்து அழுத்தம் தந்து மற்றும் செயல்படுத்தவிருக்கும் ஒவ்வொன்றிற்காகவுமே நன்றி.

 ஆண்டவராகிய கடவுளே, உமக்கு நன்றி. அந்த அச்சத்தை நான் கடந்து சென்றதிற்கு…

இப்படிக்கு,

பணி ஓய்வுப் பெற்ற அருட்பணி. தந்தை.அகத்தின் வோங்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Church of the Holy Name of Mary is a Roman Catholic Church situated at Permatang Tinggi. Our mission is to share the Good News of the Kingdom of God to everyone. 

About us

Resources