சில நேரங்களில் வாழ்வின் சில கட்டங்களில் இறைவன் உங்களை கை நெகிழ்ந்ததாக நீங்கள் உணரலாம். அல்லது அவரின் வாக்குறுதி உங்களிடம் இன்னும் நிறைவேறவில்லை என்பதை நீங்கள் உணரலாம். அப்படியானால், நான் உங்களுக்கு ஒன்றை நினைவுறுத்த விழைகிறேன். இறைவன் நம் நேர வரைபடத்திற்குள் செயல்பட மாட்டார். மற்றும் நாம் விரும்பும் வழியை அவர் தேர்ந்து கொள்ள மாட்டார். ஆனால், நீங்கள் அவரை நம்ப தொடங்கினால் , உங்கள் வாழ்வில் இறைவனின் நன்மைத்தனங்களை காண்பீர்கள். நீங்கள் இறைவன் மேல் நாள் தோறும் நம்பிக்கை வைத்தால், உங்களின் கடந்த காலங்களில் இறைவன் உங்கள் வாழ்வில் நிகழ்த்திய நன்மைத்தனங்களை நினைத்து நன்றி கூறினால், மற்றும் நம்பிக்கை இழக்காமல் இருந்தால், நீங்கள் உங்களை சுற்றிலும் இறைவனின் மாபெரும் அற்புதங்களை நிகழ்வதை காண்பீர்கள். அவரின் மாறாத நிலைத்தன்மை உங்களை சுற்றிலும் இருப்பதை காண்பீர்கள். அவர் மேல் நமது நம்பிக்கையை வைத்து அவர் அளித்த வாக்குறுதி நிறைவேறுவதை நாம் தாராளமாக காணலாம்.
இறைவனின் வாக்குறுதி அவரை சார்ந்தோரை சுற்றி என்றும் நிலைக்கும்.
அது அவரின் குணநலன்களில் ஒன்றாகும். அவரை நாம் சார்ந்து அவர் வாக்களித்ததை நாம் பெற்று அவர் நம்முடன் உடனிருப்பதை நாம் உணரலாம்.
உங்களின் கடந்த காலங்கள் உங்களை அழுத்தி பிடித்து விடமால், வருத்தத்திற்கு உள்ளாகாமல் முன்னேறி செல்லுங்கள். இறைவன் மீது மீண்டும் இன்று நம்பிக்கை வைத்திட துணிவு கொள்ளுங்கள்.
நன்றியின் மன்றாட்டு.
ஆண்டவராகிய கடவுளே,
என் வலியையும் மற்றும் வருத்தங்களையும் ஒதுக்கி உம்மை சார்ந்து வாழ எனக்கு உதவும்.
உமது திட்டங்களும் வழிகளும் நான் அறியாமல் இருந்தாலும், அத்திட்டம் மாபெரும் சிறந்ததாய் இருக்கும் என அறிவேன்.
என் வாழ்வில் உமது மாறாத நிலைத்தன்மைக்காக நன்றி.
இப்படிக்கு,
பணி ஓய்வுப் பெற்ற அருட்.பணி.தந்தை.அகத்தின் வோங்
Church of the Holy Name of Mary is a Roman Catholic Church situated at Permatang Tinggi. Our mission is to share the Good News of the Kingdom of God to everyone.