இன்ரு, திருவருகைக் கால 2-ம் ஞாயிறில் தூய மாற்கு இவ்வாறு தம் கதையை தொடங்குகிறார். “கடவுளின் மகனாகிய இயேசு கிறிஸ்துவைப் பற்றிய நற்செய்தியின் தொடக்கம்.” (மாற்கு 1:1).
“நான் உங்களுக்குத் தண்ணீரால் திருமுழுக்குக் கொடுத்தேன்; அவரோ உங்களுக்குத் தூய ஆவியால் திருமுழுக்குக் கொடுப்பார்” (மாற்கு 1:8).
ஆண்டவர் இயேசுவின் போதனையின் விடுதலையின் வல்லமையை தூய ஆவியார் நம் இல்லத்திற்கு கொண்டு வரும் வேளையில் அவர் அன்பின் வல்லமையையும் கொண்டு வருகிறார்.
திருவருகை என்பது ஆண்டவர் இயேசு கிறித்துவின் பசுமையை வருகையை,சந்திப்பை நாம் வாழ்வில் கொண்டாடுவதாகும்.
“இதோ, நான் கதவு அருகில் நின்று தட்டிக்கொண்டிருக்கிறேன். யாராவது எனது குரலைக் கேட்டுக் கதவைத் திறந்தால், நான் உள்ளே சென்று அவர்களோடு உணவு அருந்துவேன்; அவர்களும் என்னோடு உணவு அருந்துவார்கள்.” (திருவெளிப்பாடு 3:20).
ஆண்டவர் இயேசு கிற்த்துவை நம் உள்ளத்து கதவை திறந்து வரவேற்போம்.
“ஆமென். ஆண்டவராகிய இயேசுவே, வாரும்.” (திருவெளிப்பாடு 22:20).
“மரியா ஆண்டவருடைய காலடி அருகில் அமர்ந்து அவர் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருந்தார்.” (லூக்கா 10:39).
“அவரோ உங்களுக்குத் தூய ஆவியால் திருமுழுக்குக் கொடுப்பார்“. (மாற்கு 1:8).
வரும் 2024-ம் புது ஆண்டை மாபெரும் மகிழ்ச்சியுடன் மற்றும் திடத்துடன் எதிர் கொள்ள…
ஆண்டவராகிய இயேசு கிறித்துவே,
இந்த புதிய திருவழிப்பாட்டை ஆண்டில் தூய மாற்குவின் நற்செய்தியை வாசித்து செவிமடுக்கும் பொழுது நோய்களை குணப்படுத்தவும் தூய வல்லமைகைளை வெளியேற்ரவும் ஆண்டவராகிய இயேசு கிறித்துவின் போதனைகளையும் கதையகளையும் அனுபவித்து பசுமையுணர்வுடன் புரிந்துக் கொள்ள தூய ஆவியால் எநக்கு திருமுழுக்கு அளியும்……..
வரும் 2024-ம் ஆண்டில் வளமான மற்றும் பசுமையான வாழ்வை நான் வாழ்ந்திட…
தந்தைக்கும் மகனுக்கும் தூய ஆவியாருக்கும்
மாட்சிமை உண்டாகுக.
தொடக்கத்தில் இருந்ததுபோல
இப்பொழுதும் எப்பொழுதும்
என்றென்றும் இருப்பதாக. ஆமென்.
இப்படிக்கு,
பணி ஓய்வுப் பெற்ற அருட்பணி.தந்தை.அகஃத்தின் வோங்
Church of the Holy Name of Mary is a Roman Catholic Church situated at Permatang Tinggi. Our mission is to share the Good News of the Kingdom of God to everyone.