அவர் தமக்குள் கணக்குப் பார்த்துக் கொண்டிருப்பார். (நீமொ 23:7)
எண்ணம் என்பது அனைத்து சூழ்நிலையின் தலைவர் அல்லது முன்னோடியாகும். நாம் ஒவ்வொரு நாளும் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியானது நமது சிந்திக்க அனுமதிக்கும் எண்ணங்களின் நேரடி முடிவுகளாகும்.
நாம் எதிர்மறையான எண்ணம் கொண்டிருந்தால், நம் வாழ்வும் எதிர்மறையாகத்தான இருக்கும்.
“இந்த உலகத்தின் போக்கின்படி ஒழுகாதீர்கள். மாறாக, உங்கள் உள்ளம் புதுப்பிக்கப் பெற்று மாற்றம் அடைவதாக! அப்போது கடவுளின் திருவுளம் எது எனத் தேர்ந்து தெளிவீர்கள். எது நல்லது, எது உகந்தது, எது நிறைவானது என்பதும் உங்களுக்குத் தெளிவாகத் தெரியும்.” (உரோமையர் 12:2)
நிறைய நபர்கள் இன்று துயர் காணுவது அவர்களின் சிந்திக்கும் தவறான கோணத்தில் தான். எதிர்மறையான எண்ணங்கள் அவர்கள் வாழ்வில் சந்திக்கும் துயரங்களை உருவாக்கும் வழியாக அமைந்து விடும்.
நன்றியுணர்வாக, அந்த எண்ணங்களுக்கு நாம் அடிமையாக வாழவில்லை. இறைவனின் வார்த்தை உடனிருத்திக் கொண்டு அந்த எண்ணங்களை நேர்ப்படுத்த தேர்வுச் செய்யலாம்.
நமது எண்ணம் ஒரு போர்க்களம். The mind is a battlefield. அழிவையும், எதிர்மறையான எண்ணங்களையும் எதிர்க்கவும் முடிவெடுங்கள். நேர்மறையான எண்ணங்களை உங்கள் வாழ்வில் விதையுங்கள். புதிய மாற்றங்களுக்காக உங்கள் எண்மங்களை மாற்றுவீர்களானால், உங்கள் வாழ்வும் புதிய மாற்றங்களுக்காக இனிதே மாறும்.
நன்றியின் மன்றாட்டு.
கனிவுள்ள இறைவா, என் எண்ணங்களுக்கு நான் அடிமையாய் இல்லாமல் இருப்பதற்காக உமக்கு நன்றி நவில்கிறேன்.
உமது துணையுடன், என் வாழ்வை பாதிக்கும் எந்த ஒரு எதிர்மறையான எண்ணங்களையும் நான் மாற்ற முடியும்.
உமது வார்த்தையிலும் நேரத்தை செலவிடுவதிலும் உமது வாக்குறுதியைப் பற்றிச் சிந்திப்பதிலும் நான் எண்ணங்களின் போராட்டதை வெற்றிக் கொள்வேன்.
இப்படிக்கு,
பணி ஓய்வுப் பெற்ற அருட்பணி.அகஃத்தின் வோங்
Church of the Holy Name of Mary is a Roman Catholic Church situated at Permatang Tinggi. Our mission is to share the Good News of the Kingdom of God to everyone.