திருவிவிலியம் முழுவதுமாக, பல வழிகளில் மக்கள் முன்னேற்றத்தையும் வெற்றியையும் கொண்டாடியுள்ளனர். அதில் குறிப்பிடதக்க ஒரு வழியானது, இறைவனுக்கு நேரம் ஒதுக்கி, அவருக்கு பலி ஒப்புக்கொடுத்து நன்றி நவில்தலாகும். நோவா அதைச் செய்தார். ஆபிரகாம் அதைச் செய்தார். நாமும் இதையே செய்வோம்.
இறைவன் நமக்கு செயல்புரிந்த அனைத்திற்காகவும் நேரம் ஒதுக்கி நன்றி நவில்ந்தோமானால் நமது வாழ்விலும் பல கொண்டாட்டங்களுக்கான நேரத்தை உள்ளடக்க முடியும்.
நன்றியுணர்வு என்னும் தன்மையானது ஒரு நபர் எப்படியானவர் என்பதை வெளிப்படுத்தும். இது இறைவனை முதன்மையானதாகவும், நாம் பெறும் ஆசீரானது அனைத்திற்கும் அவரே மூல முதலானவர் என்பதை அறிவதாகும்.
நன்றியுணர்வானது தலைமை என்னும் சொல்லில் அடங்காது. இந்த தன்மையானது கூறுவது, “இறைவனின் நன்மைதனத்திற்கு நான் பாத்திரமாகாதவன் என்பதை அறிகிறேன். ஆயினும் அதற்காக நான் மிகவும் நன்றியுள்ளவனாக உணர்கின்றேன்.”
நன்றியின் மன்றாட்டு
கனிவுள்ள ஆண்டவரே, என் வாழ்வில் நீர் செயல்புரிந்த அனைத்து நன்மைதனத்திற்காகவும் நான் உமக்கு நன்றி நவில்கிறேன். இன்று, உமது நன்மையினை நினைத்து மற்றும் உமது ஆசீருக்காக நன்றி நவில்கிறேன்.
இப்படிக்கு,
பணி ஓய்வுப் பெற்ற அருட்பணி.தந்தை.அகஃத்தின் வோங்
Church of the Holy Name of Mary is a Roman Catholic Church situated at Permatang Tinggi. Our mission is to share the Good News of the Kingdom of God to everyone.