இறைவன்நம்முடன்இருப்பவர்

இறைவன் எல்லாம் வல்ல கண்பவர், எல்லாம் வல்ல அறிபவர், எல்லாம் வல்ல வல்லவர் மற்றும் எங்கும் நிறைந்துள்ளவர். இறைவன் நம்மை அரிந்தவர். இறைவன் நம்முடன் இருப்பவர். அதுமட்டுமின்றி, நாம் அவரை அறிய அனுமதிப்பதே அவர் அளித்த மாபெரும் கொடை.

ஆண்டவரே! நீர் என்னை ஆய்ந்து அறிந்திருக்கின்றீர்!

நான் அமர்வதையும் எழுவதையும் நீர் அறிந்திருக்கின்றீர்; என் நினைவுகளை எல்லாம் தொலையிலிருந்தே உய்த்துணர்கின்றீர்.

நான் நடப்பதையும் படுப்பதையும் நீர் அறிந்துள்ளீர்; என் வழிகள் எல்லாம் உமக்குத் தெரிந்தவையே.

ஆண்டவரே! என் வாயில் சொல் உருவாகு முன்பே, அதை முற்றிலும் அறிந்திருக்கின்றீர்.எனக்கு முன்னும் பின்னும் என்னைச் சூழ்ந்து இருக்கின்றீர்; உமது கையால் என்னைப் பற்றிப்பிடிக்கின்றீர்.

என்னைப்பற்றிய உம் அறிவு எனக்கு மிகவும் வியப்பாயுள்ளது; அது உன்னதமானது; என் அறிவுக்கு எட்டாதது.” (திருப்பாடல்கள் 139: 1-6).

சில வேளைகளில், மக்கள் நம்மை பற்றி அவர்களுக்கு பிடிக்கமால் போகும் ஏதோ ஒரு விடயத்தை அடையாளம் கண்டு விடுவார்களோ என அச்சத்தினால் அவர்கள் நம்மை அறிவதை நாம் தடுக்கிறோம். ஆனால், இறைவன் நம்மை பற்றி அனைத்தையும் அறிந்திருக்கிறார். மேலும், நம் சலையில் இருந்து முடியையும் அறிந்திருக்கிறார். “உங்கள் தலைமுடியெல்லாம் எண்ணப்பட்டிருக்கின்றது.” ( மத்தேயு 10:30 ) ஆயினஉம் அவர் நம்மை ஏற்று அன்புச் செய்கிறார். அவர் நம்மை விழிப்புணர்வாய் காணும் தன்மை யாவுமே நமக்கு அறுதலாய் அமைய வேண்டும். ஏனெனில், ஒவ்வொரு சூளலிலும், ஒவ்வொரு மசேதனையிலும் நம்மை பாதூகாத்து, அன்புச் செய்து மற்றும் வழிநடத்தி, அதுமட்டுமில்லாமல் நம்மை முழுவதுமாய் அறிந்து அன்புச் செய்கிறார்.

இப்படிக்கு,

பணி ஓய்வுப் பெற்ற அருட்பணி.தந்தை.அகஃத்தின் வோங்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Church of the Holy Name of Mary is a Roman Catholic Church situated at Permatang Tinggi. Our mission is to share the Good News of the Kingdom of God to everyone. 

Resources