வாக்குறுதி
“ஆனால் தூய ஆவி உங்களிடம் வரும்போது நீங்கள் கடவுளது வல்;லமையைப் பெற்று எருசலேமிலும் யூதேயா, சமாரியா முழுவதிலும் உலகின் கடையெல்லைவரைக்கும் எனக்குச் சாட்சிகளாய் இருப்பீர்கள்” என்றார்.”
(திருத்தூதர் பணிகள் 1:8)
வாக்குறுதி நிறைவேறியது.
“1 பெந்தக்கோஸ்து என்னும் நாள் வந்தபோது அவர்கள் எல்லாரும் ஒரே இடத்தில் கூடியிருந்தார்கள். 2 திடீரென்று கொடுங்காற்று வீசுவது போன்று ஓர் இரைச்சல் வானத்திலிருந்து உண்டாகி, அவர்கள் அமர்ந்திருந்த வீடு முழுவதும் ஒலித்தது. 3 மேலும் நெருப்புப்போன்ற பிளவுற்ற நாவுகள் ஒவ்வொருவர் மேலும் வந்து அமர்ந்ததை அவர்கள் கண்டார்கள். 4 அவர்கள் அனைவரும் தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டனர். தூய ஆவியின் தூண்டுதலால் அவர்கள் ஒவ்வொருவரும் வெவ்வேறான மொழிகளில் பேசத்தொடங்கினார்கள்.” (திருத்தூதர் பணிகள் 2:1-4)
முடிவானது:
“36 ஆகையால் நீங்கள் சிலுவையில் அறைந்த இந்த இயேசுவைக் கடவுள் ஆண்டவரும் மெசியாவுமாக்கினார் என்பதை இஸ்ரயேல் மக்களாகிய நீங்கள் அனைவரும் உறுதியாக அறிந்துகொள்ளுங்கள்.”
(திருத்தூதர் பணிகள் 2:36)
37 அவர்கள் இதைக் கேட்டு உள்ளம் குத்தப்பட்டவர்களாய் பேதுருவையும் மற்ற திருத்தூதர்களையும் பார்த்து, “சகோதரரே, நாங்கள் என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டார்கள்.
38 அதற்குப் பேதுரு, அவர்களிடம், “நீங்கள் மனம் மாறுங்கள். உங்கள் பாவங்களிலிருந்து மன்னிப்புப் பெறுவதற்காக ஒவ்வொருவரும் இயேசு கிறிஸ்துவின் பெயரால் திருமுழுக்குப் பெறுங்கள். அப்பொழுது தூய ஆவியைக் கொடையாகப் பெறுவீர்கள்.” (திருத்தூதர் பணிகள் 2:37-38)
41 “அவருடைய வார்த்தைகளை ஏற்றுக்கொண்டவர்கள் திருமுழுக்குப்பெற்றார்கள். அன்று ஏறக்குறைய மூவாயிரம் பேர் அவர்களோடு சேர்க்கப்பட்டனர்.”(திருத்தூதர் பணிகள் 2:41)
திருமுழுக்கில், திடப்படுத்தலில் மற்றும் தூய நற்கருணையில் வளமான மற்றும் நிறைவான வாழ்வை வாழ நாம் தூய ஆவியின் காணியாலும் கொடையாலும் நிரப்படுகிறோம்.
காலை மன்றாட்டு.
தூய ஆவியே வாரும். எனக்கு நீர் தேவை. நான் இன்று செயல் புரியும் அனைத்திலும் வளமை பெறவும் மற்றும் வெற்றிக் காணவும் உமது கொடையாலும் வல்லமையாலும் என்னை நிரப்பும்.
இப்படிக்கு,
பணி ஓய்வு பெற்ற அருட்.பணி .தந்தை.அகத்தின் வோங்
Church of the Holy Name of Mary is a Roman Catholic Church situated at Permatang Tinggi. Our mission is to share the Good News of the Kingdom of God to everyone.