நீங்கள் இதுவரை கொள்ளாத சிறந்த நண்பன்

தம் நண்பர்களுக்காக உயிரைக் கொடுப்பதைவிட சிறந்த அன்பு யாரிடமும் இல்லை. (யோவான் 15:13)

ஏசுவே நீங்கள் இதுவரை கொண்டிராத சிறந்த மாபெரும் நண்பராய் விளங்குவர். அவர் அங்கு இல்லை என்று உணர்ந்தாலும் உணராவிடடாலும், உங்கள் வாழ்வின் ஒவ்வொரு வேளையிலும் அவர் உங்களுக்காக அங்கே இருப்பார். உங்களின் முழு இதயம் மற்றும் ஆன்மா  வழி  அவரை சார்ந்திருங்கள். அவரை நம்புங்கள். அவர் உங்களை நேர்வழியில் மற்றும் நேரிய பாதையிலும் நடத்துவார். நீங்கள் அவரிடம் அனைத்தையும் கூறலாம்.

அவர் உங்களுக்கு அளித்த ஆசீருக்காகவும், அவரின் உடனிருப்பின் ஆசீருக்காகவும் அவருக்கு நன்றி கூறுங்கள். அவர் உங்களை என்றும் புரிந்து கொள்வார். உங்களை ஒருபோதும் மறுக்கவோ அல்லது புறக்கணிக்கவோ மாட்டார். 

அவர் பொறுப்பெடுத்து வழிநடத்த அவருக்கு எதுவும் அவ்வளவு பெரியதும் சிரியதுமாக ஒரு விடயமாக தோன்றுவது இல்லை. நாம் இறைவனின் உடனிருப்பை எப்பொழுதும் உணரா விடடாலும், நாம் அவரில் நம்பிக்கை கொள்ளும் வேளையில் நாம் அவர் நம்மில் செயலாற்றுவதை நம் வாழ்வில் காணலாம்.

நன்றியின் மன்றாட்டு

நான் கொண்டுள்ள நண்பருக்காக அப்பா, தந்தையே, உமக்கு நன்றி.

நான் தனிமையில் இல்லை என்பதை நம்புகிறேன். நான் கிறித்து இயேசுவில் நம்பிக்கை கொள்ள நான் சிறந்த நபரை பெற்றுள்ளேன் என்பதை நம்புகிறேன்.

என் வாழ்வில் ஒவ்வொரு நாளும் உமது அன்பிற்காகவும் மற்றும் உடனிருப்பிற்க்காகவும் உமக்கு நன்றி.

இப்படிக்கு,

பணி ஓய்வு பெற்ற அருட்.பனி.தந்தை.அகத்தின் வோங்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Church of the Holy Name of Mary is a Roman Catholic Church situated at Permatang Tinggi. Our mission is to share the Good News of the Kingdom of God to everyone. 

About us

Resources