1 மீண்டும் இயேசு, “நீங்கள் உள்ளம் கலங்க வேண்டாம். கடவுளிடம் நம்பிக்கை கொள்ளுங்கள். என்னிடமும் நம்பிக்கை கொள்ளுங்கள்.
2 தந்தை வாழும் இடத்தில் உறைவிடங்கள் பல உள்ளன. அப்படி இல்லையெனில், “உங்களுக்கு இடம் ஏற்பாடு செய்யப்போகிறேன்” என்று சொல்லியிருப்பேனா?
3 நான் போய் உங்களுக்கு இடம் ஏற்பாடு செய்தபின் திரும்பிவந்து உங்களை என்னிடம் அழைத்துக்கொள்வேன். அப்போது நான் இருக்கும் இடத்திலேயே நீங்களும் இருப்பீர்கள். (யோவான் 14:1-3).
இறப்பை பற்றி கவலையுறும் பொழுது, மற்றும் அதற்கு பிறகு நடக்கவிருக்கும் விடயங்களை பற்றி என்னும் பொழுது இயேசு நம்மை அரவணைக்கிறார். அவர் நம்மை எதை செய்யும் வேண்டும் எதை செய்ய வேண்டாம் என்று நினைவூட்டுகிறார். உங்களை இதயத்தை கவலை கொள்ள விடாதீர்கள். அவர் தற்பொழுது இருக்கும் நிலைமை உங்களை அச்சத்திலும் மற்றும் கவலையிலும் ஆழ்ந்து விடாமல் இருக்க விரும்புகிறார். அடுத்து, அவரில் நம்பிக்கை வைத்திட அவர் நம்மை அழைக்கிறார். இயேசு, நமது விசுவாசத்தையும் மற்றும் நோக்கத்தையும் இறைவனை நோக்கி திருப்புகிறார். ஏனெனில், இறைவன் தாமே இவையனைத்தையும் தம் ஆளுகையில் வைத்துள்ளார். “3 நான் போய் உங்களுக்கு இடம் ஏற்பாடு செய்தபின் திரும்பிவந்து உங்களை என்னிடம் அழைத்துக்கொள்வேன். அப்போது நான் இருக்கும் இடத்திலேயே நீங்களும் இருப்பீர்கள்.” என் இயேசு நம்மை உறுதிப்படுத்துகிறார். (யோவான் 14:3).
“43 அதற்கு இயேசு அவனிடம், “நீர் இன்று என்னோடு பேரின்ப வீட்டில் இருப்பீர் என உறுதியாக உமக்குச் சொல்கிறேன்” என்றார்.” (லூக்கா 23:43).
தூய மரியே, இறைவனின் தாயே…
பாவிகளை இருக்கும் எங்களுக்காக
இப்பொழுதும் எங்கள் இறப்பின் வேளையிலும் மன்றாடும்.
இப்படிக்கு,
பணி ஓய்வுப் பெற்ற அருட்.பணி.தந்தை.அகத்தின் வோங்
Church of the Holy Name of Mary is a Roman Catholic Church situated at Permatang Tinggi. Our mission is to share the Good News of the Kingdom of God to everyone.