“1 ஆண்டவரே, என் விண்ணப்பத்திற்குச் செவி சாய்த்தருளும்; என் பெருமூச்சைக் கவனித்தருளும்.
2 என் அரசரே, என் கடவுளே, என் கெஞ்சும் குரலை உற்றுக்கேளும்; ஏனெனில். நான் உம்மை நோக்கியே மன்றாடுகின்றேன்.
3 ஆண்டவரே, விடியற்காலையில் என் குரலைக் கேட்டருளும்; வைகறையில் உமக்காக வழிமேல் விழிவைத்துக் காத்திருப்பேன்.
4 ஏனெனில், நீர் பொல்லாங்கைப் பார்த்து மகிழும் இறைவன் இல்லை; உமது முன்னிலையில் தீமைக்கு இடமில்லை.
5 ஆணவமிக்கோர் உமது கண்முன் நிற்க மாட்டார்; தீங்கிழைக்கும் அனைவரையும் நீர் வெறுக்கின்றீர்.” (திருப்பாடல்கள் 5: 1-5)
இறைவனை நெருங்கும் வேளையிலே, காலை வேளையின் தொடக்கத்திலேயே குழப்பங்களால் நாம் சொல்கின்ற முன், இறைவனிடம் நம்மையே நாம் நேர்மையாக ஒப்புக்கொடுத்து மன்றாடுவது இன்னும் ஓர் வழியாகும். நாம் முழு நாளையும் நாம் இறைவனிடம் அர்ப்பணிப்போம். ஆகவே, இறைவனிடம் விளக்கமாகவும் மற்றும் நேர்மையாகவும் உரையாடுவோம். நீங்கள் காலை வேளையில் எழுந்து கணமே இதை செய்திட முயலுங்கள்.
நமது முனகுதலிலும் அவர் ஆர்வம் கொண்டுள்ளார்.
இறைவனுடன் அமர்ந்து மன்றாடி அவரின் வார்த்தையை படித்திட உங்களுக்கு ஒவ்வொரு நாளும் நேரம் உள்ளதா?
இப்படிக்கு,
பணி ஓய்வுப் பெற்ற அருட்.பணி.தந்தை.அகஃத்தின் வோங்
Church of the Holy Name of Mary is a Roman Catholic Church situated at Permatang Tinggi. Our mission is to share the Good News of the Kingdom of God to everyone.