நாம் ஒரு நபருக்கு ஒரு பொறுப்பை வழங்கும், அந்த வேலையை நிறைவுச் செய்வதற்கு அந்த நபருக்கு நாம் ஒரு குறிப்பிட்ட உரிமையையும் அதற்கான கருவிகளையும் அளிக்க வேண்டும்.
இயேசு தமது திருமுழுக்கில், தூய ஆவியால் அவரின் பின் குறிக்கப்படும் மறைப்பணிக்கு உட்படுத்தப்பட்டார் “ஏனெனில் அவர் தம் மக்களை அவர்களுடைய பாவங்களிலிருந்து மீட்பார்“; என்றார்.” (மத்தேயு 1:21)
“அவர் ஆற்றிலிருந்து கரையேறிய உடனே வானம் பிளவுபடுவதையும் தூய ஆவி புறாவைப் போல் தம்மீது இறங்கிவருவதையும் கண்டார்.” (மாற்கு 1:10)
“உடனே தூய ஆவியால் அவர் பாலைநிலத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.” (மாற்கு 1:12)
இயேசு எப்படி என்பதை திட்டமிடுகிறார். “ஏனெனில் அவர் தம் மக்களை அவர்களுடைய பாவங்களிலிருந்து மீட்பார்“; என்றார்.” (மத்தேயு 1:21)
பெந்தகோத்து நிகழ்வில், குழந்தையான திருஅவை தூய ஆவியாரால் இவ்வாறு ஆட்கொள்ளப்படது. “எனவே நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள்.” (மத்தேயு 28:19)
“மேலும் நெருப்புப்போன்ற பிளவுற்ற நாவுகள் ஒவ்வொருவர் மேலும் வந்து அமர்ந்ததை அவர்கள் கண்டார்கள்.அவர்கள் அனைவரும் தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டனர். தூய ஆவியின் தூண்டுதலால் அவர்கள் ஒவ்வொருவரும் வெவ்வேறான மொழிகளில் பேசத்தொடங்கினார்கள்.” (திப 2: 3-4)
“யூதரும் யூதம் தழுவியோரும் கிரேக்கரும், அரேபியரும் ஆகிய நாம் நம்மொழிகளிலே கடவுளின் மாபெரும் செயல்களை இவர்கள் பேசக்கேட்கிறோமே! “என்றனர்.” (திப 2:11)
அவர்கள் இதைக் கேட்டு உள்ளம் குத்தப்பட்டவர்களாய் பேதுருவையும் மற்ற திருத்தூதர்களையும் பார்த்து, “சகோதரரே, நாங்கள் என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டார்கள். (திப 2:37)
அதற்குப் பேதுரு, அவர்களிடம், “நீங்கள் மனம் மாறுங்கள். உங்கள் பாவங்களிலிருந்து மன்னிப்புப் பெறுவதற்காக ஒவ்வொருவரும் இயேசு கிறிஸ்துவின் பெயரால் திருமுழுக்குப் பெறுங்கள். அப்பொழுது தூய ஆவியைக் கொடையாகப் பெறுவீர்கள். (திப 2:38)
நமது திருமுழுக்கிலும் திடப்படுதலிலும், நாம் செயல் புரிவதிலும் வாழ்வதிலும் வளத்தையும் வெற்றியையும் பெற தூய ஆவியால் நிரப்படுகிறோம். “வளமான மற்றும் நிறைவான வாழ்வு.” (யோவான் 10:10)
நமது காலை மன்றாட்டு
தூய ஆவியே வாரும்… எனக்கு நீர் அவசியமாய் உள்ளீர்…
நான் இன்று செயல் புரியும் அனைத்திலும், நான் வளமையையும் வெற்றியையும் பெற,
உமது கொடைகளாலும் வல்லமையாலும் என்னை ஆட்கொள்ளும்…
தந்தைக்கும், மகனுக்கும், தூய ஆவிக்கும் மாட்சி உண்டாவதாக…
தொடக்கத்தில் இருந்ததுப் போல், இப்பொழுதும், எப்பொழுதும்,
என்றென்றும் இருப்பதாக… ஆமென்…
இப்படிக்கு,
பணி ஓய்வுப் பெற்ற அருட்பணி.தந்தை.அகஃத்தின் வோங்
Church of the Holy Name of Mary is a Roman Catholic Church situated at Permatang Tinggi. Our mission is to share the Good News of the Kingdom of God to everyone.