“பாவமன்னிப்புஅடையமனம்மாறித்திருமுழுக்குப்பெறுங்கள்” Luke 3:3

பாவத்திலிருந்து மன்னிப்புப் பெற இறைவனிடம் திரும்பி வருதலானது பாவங்களிலிருந்து முற்றிலும் நீங்குவதைக் குறிக்கிறது.

இயேசுவிடன் சீடராக இருப்பதாக சொல்லி, நான் அவரை நம்புகிறேன் என்று வார்த்தையாக மட்டும் கூறிவிட்டு நாம் தேர்ந்தெடுக்கும் வழியில் வாழ்வது சரியல்ல.

இறைவனுடன் தனிப்பட்ட உறவில் வாழாமல் நன்னெறியான வாழ்வை நாம் வாழவும் முடியாது. ஏனெனில், நன்மையான குணம் கொண்டிருந்தாலும், பாவத்திலிருந்து நமக்கு மன்னிப்பு கிடைக்காது.

நீங்கள் இறைவனிடம் பாவத்திலிருந்து வெளியேற பாவத்திலிருக்கும் உங்கள் வாழ்விலிருந்து வெளியேற உதவிக் கேட்கும் வேளையில், உங்களிடம் இறைவன் சுட்டிக் காட்டும் பாவத்தை விட்டுவிட்டு, அவருக்கு உகந்து விரும்பும் வாழ்வை வாழ அவர் உங்களை உருமாற்ற உங்கள் வாழ்விற்குள் அவரை அனுமதியுங்கள்.   

வரும் 11.12.2024 புதன்கிழமை அன்று, நல்ல ஒரு ஆழமான குரத்தில் கொள்ளப்படும் ஒப்புரவு அருள் அடையாளத்தைப் பெற்றுக் கொள்ளுங்கள்.

உம் மீட்பின் மகிழ்ச்சியை மீண்டும் எனக்கு அளித்தருளும்; தன்னார்வ மனம் தந்து என்னைத் தாங்கியருளும்.” திருப்பாடல்கள் 51:12

இப்படிக்கு

பணி ஓய்வுப் பெற்ற அருட்பணி.தந்தை.அகஃத்தின் வோங்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Church of the Holy Name of Mary is a Roman Catholic Church situated at Permatang Tinggi. Our mission is to share the Good News of the Kingdom of God to everyone. 

About us

Resources