உயிர்ப்பின்ஞாயிறு

“அவர் உயிருடன் எழுப்பப்பட்டார்; அவர் இங்கே இல்லை; இதோ, அவரை வைத்த இடம்..” (மாற்கு)

அவர் அவர்களிடம், “திகிலுற வேண்டாம்; சிலுவையில் அறையப்பட்ட நாசரேத்து இயேசுவைத் தேடுகிறீர்கள்; அவர் உயிருடன் எழுப்பப்பட்டார்; அவர் இங்கே இல்லை; இதோ, அவரை வைத்த இடம். நீங்கள் புறப்பட்டுச் செல்லுங்கள், பேதுருவிடமும் மற்றச் சீடரிடமும், “உங்களுக்கு முன்பாக அவர் கலிலேயாவுக்குப் போய்க் கொண்டிருக்கிறார்; அவர் உங்களுக்குச் சொன்னது போலவே அவரை அங்கே காண்பீர்கள்எனச் சொல்லுங்கள்என்றார்.” (மாற்கு 16:6-7)

வானவர் சீடர்களை இயேசுவை கலிலேயாவில் சந்திக்குமாறு கூறினார். “ஆனால் நான் உயிருடன் எழுப்பப்பட்ட பின்பு உங்களுக்குமுன்பே கலிலேயாவுக்குப் போவேன்என்றார்.” (மாற்கு 14:28).

இங்கே தான் இயேசு அவர்களில் பெரும்பான்மையினரை அழைத்தார். “இயேசு அவர்களைப் பார்த்து, “என் பின்னே வாருங்கள்; நான் உங்களை மனிதரைப் பிடிப்பவர் ஆக்குவேன்என்றார்.உடனே அவர்கள் வலைகளை விட்டுவிட்டு அவரைப் பின்பற்றினார்கள்.” (மாற்கு 1:17)

கடந்த 3 ஆண்டு காலமாக சீடர்கள் இயேசுவுடன் இருந்து எப்படி மனதர்களை பவலை வீசுவது என்பதை கற்றுணர்ந்தனர். “பின்பு அவர் கலிலேய நாடுமுழுவதும் சென்று அவர்களுடைய தொழுகைக் கூடங்களில் நற்செய்தியைப் பறைசாற்றி பேய்களை ஓட்டி வந்தார்.” (மாற்கு 1:39).

கலிலேயாவிற்கு மீண்டும் சென்றவுடன், இயேசுவுடன் தாங்கள் இருந்த நேரத்தையும், தங்களின் அழைப்பையும் அது நினைவுப்படுத்தும். இந்த நினைவுகள் இயேசுவின் மேல் நம்பிக்கையையும் திடத்தையும் அவர்களுக்கு வலுப்படுத்தும்.

இன்று, நன்றியுணர்வுள்ள இதயத்தோடு, அனைத்து நன்மைகளுக்காவும் கனிவாய் இருங்கள். அது சிறியதாயினும் அல்ல பெரியதாயினும், உங்கள் வாழ்வில் இயேசு செய்த நன்மைகளுக்காக நன்றி கூறுங்கள். உங்கள் வாழ்வில் கடந்த காலத்தில் இயேசு செய்த நன்மைகளை நினைவுக் கூர்ந்து, நிகழ் காலத்தில் நீங்கள் கொண்டிருப்தை உணர்ந்து, உங்கள் வாழ்வில் வரும் காலத்தில் அவர் செயல்படுத்தப் போகும் மாபெரும் காரியத்தை குறித்து நீங்கள் கண்டிப்பாய் வியப்பைக் கொண்டிருக்கப் போகிறீர்கள்.

நன்றியுணர்வுக் கொண்டு தயாராய் இருங்கள்உங்கள் வாழ்வில் ஆம்டவராகிய இயேசு ஒரு மாபெரும் காரியம் செய்ய காத்திருக்கிறார்.!

கிறிஸ்துவையும் அவர்தம் உயிர்த்தெழுதலின் வல்லமையையும் அறியவும் அவருடைய துன்பங்களில் பங்கேற்று, சாவில் அவரை ஒத்திருக்கவும் விரும்புகிறேன்.” (பிலிப்பியர் 3:10).

இப்படிக்கு,

பணி ஓய்வுப் பெற்ற அருட்பணி.தந்தை.அகஃத்தின் வோங்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Church of the Holy Name of Mary is a Roman Catholic Church situated at Permatang Tinggi. Our mission is to share the Good News of the Kingdom of God to everyone. 

Resources