வலியிலிருந்து மீண்டல்

“யோனில் அழுவோர்க்கு ஆவன செய்யவும், சாம்பலுக்குப் பதிலாக அழகுமாலை அணிவிக்கவும், புலம்பலுக்குப் பதிலாக மகிழ்ச்சித் தைலத்தை வழங்கவும், நலிவுற்ற நெஞ்சத்திற்குப் பதிலாகப் "புகழ்" என்னும் ஆடையைக் கொடுக்கவும் என்னை அனுப்பியுள்ளார். "நேர்மையின் தேவதாருகள்" என்றும் "தாம் மாட்சியுறுமாறு ஆண்டவர் நட்டவை" என்றும் அவர்கள் பெயர் பெறுவர்” (Isaiah 61:3)

வலியிருந்தும் அல்லது ஏமாற்றத்திலிருந்தும் மீளுவது என்பது ஒரு சிலருக்கு மட்டும் கழ்ந்து மற்றவருக்கு நிகழாமல் இருப்பது அல்ல. மாறாக, அது ஒரு தீர்மானம். நீங்கள் அதை விட்டுவிட்டு முனஅனறி செல்ல ஒரு தீர்மானம் கொள்ளுகிறீர்கள்.    

நீங்கள் தவறுகளிலிருந்து கற்றுக் கொள்கிறீர்கள். நீங்கள் உங்கள் வாழ்வின் முறிந்த துண்டுகளை திரட்டி அதை இயேசுவிடம் அளிக்கிறீர்கள். அதை அவர் ஒன்றும் வீணாகதபடி பார்த்துக் கொள்வார். “அவர்கள் வயிறார உண்டபின், “ஒன்றும் வீணாகாதபடி, எஞ்சிய துண்டுகளைச் சேர்த்து வையுங்கள்என்று தம் சீடரிடம் கூறினார்.” (காண்க யோவான் 6:12). நீங்கள் என்ன இழந்தீர்கள் என்பதைப் பற்றி யோசிக்க மறுக்கிறீர்கள். மாறாக, நீங்கள் என்ன இருக்கிறது எந்பதை ஆய்ந்து அதை நன்றியுள்ள இதயத்துடன் பயன்படுத்த துவங்குகிறீர்கள்

கிறித்துவில், நீங்கள் மட்டும் மீளவில்லை. மாறாக, பிறர் மீளவும் நீங்கள் அவர்களை வழிநடத்த உதவலாம். பின்னடைவுகளை சந்திக்கும் நபர் அது எவ்வளவு கடினமான மற்றும் அடுக்கான நிகழ்வை சந்தித்த போதிலும் எப்பொழுதும் நன்றியுணர்வை வெளிப்படுத்தி வாழும் உதாரணமாக திகழுங்கள்.

 

என்றுமே, “ என்னால் இயலாது.” என்று சொல்லாதீர்கள். மாறாக, “ கிறித்துவோடு நான் எதையும் நிகழ்த்த முடியும். நான் என்றும் பின்வாங்கேன். ஏனெனில் இறைவனஅ என்னுடன் இருக்கிறார் என்று சொல்லி வாருங்கள்..

நன்றியின் மன்றாட்டு

ஆண்டவராகிய இயேசு கிறித்துவே,

என்வாழ்வில்குணமளிப்பைகொண்டுவந்தமைக்காவும்

சாம்பலிலிருந்து அழகை உருவாக்குவதற்காகவும் உமக்கு நன்றி நவில்கிறேன்.

நீர் நான் மேன்மேலும் வளர அழுத்தம் தருவதற்காகவும் நான்

பின்வாங்காமல் இருக்கு உதவுதற்காகவும் மன்றாடுகிறேன்

என் அனுபவங்களை பயன்படுத்தி, நான் அடைந்த அதே குணமளிப்பை

பிறரும் அடைந்திட நான் உதவிட என்னை வழிநடத்தும்.

இப்படிக்கு,

பணி ஓய்வுப் பெற்ற அருட்பணி.தந்தை.அகஃத்தின் வோங்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Church of the Holy Name of Mary is a Roman Catholic Church situated at Permatang Tinggi. Our mission is to share the Good News of the Kingdom of God to everyone. 

Resources