நம் வாழ்வில் கடவுளின் உடனிருப்பானது அச்சத்தை எதிர் கொண்டு வாழ உதவுகிறது. நம்பிக்கையின் வழி இறைவன் நம்முடன் இருக்கிறார் என்பதை நான் உணர்ந்தோமாகில், அவரின் உடனிர்ப்பிற்காக நாம் நன்றியுணர்வை வெளிப்படுத்துவதோடல்லாமல், எவ்வகை சவாலையும் துணிவுடனும் திடத்துடனும் எதிர்க் கொள்ள முடியும். நாம் எப்பொழுதும் அவரின் உடனிப்பை உணர முடியாமல் ருக்கலாம், ஆனால் அவரின் வார்த்தைக்கா நாம் நன்றியுணர்வுடன் இருக்கலாம். அவர் நம்மை விட்டு விலக மாட்டார். நம்மை கைவிடவும் மாட்டார் என்று சொன்னதை நாம் நினைவுக் கூறலாம். “ஏனெனில், “நான் ஒருபோதும் உன்னைக் கைவிடமாட்டேன்! உன்னை விட்டு விலகமாட்டேன்” என்று கடவுளே கூறியிருக்கிறார்.
6 இதனால், நாம் துணிவோடு, “ஆண்டவரே எனக்குத் துணை, நான் அஞ்சமாட்டேன்; மனிதர் எனக்கு எதிராக என்ன செய்யமுடியும்?” (எபிரேயர் 13:5-6)
திருவிவிலியத்தில், அச்சம் கொள்லாமை என்பது இதுவே தான்…
இறைவன் நம்மோடு இருக்கிறார்.
நாம் இறைவனின் தன்மையையும் அவரின் குண நலன்களையும் அறிந்தோமாகில், அவர் ஒன்றை எவ்வாறு செய்வார், எப்படி செய்வார் என்பதை நாம் அறிந்துக் கொள்ளலாம். அவர் நம்முடன் இருக்கிறார் என்பதை அறிந்துக் கொள்வதே, அனைத்தையும் விட நிறைவானது.
நன்றியின் மன்றாட்டு
ஆண்டவராகிய இயேசு கிறித்துவே,
உமது உடனிருப்பு என்னை விட்டு விலகாது என்று நீர் அளித்த வாக்குறுதிக்காக நான் உமக்கு நன்றி நவில்கிறேன்.
என்னைச் சுற்றி எது எப்படியாக இருப்பினும்,
நீர் என்னோடு இருப்பதாலும்,
என்னை எவ்வேளையிலும் சுமப்பதாலும் நான் அஞ்சமாட்டேன்.
இப்படிக்கு,
பணி ஓய்வுப் பெற்ற அருட்பணி.தந்தை.அகஃத்தின் வோங்
Church of the Holy Name of Mary is a Roman Catholic Church situated at Permatang Tinggi. Our mission is to share the Good News of the Kingdom of God to everyone.