மன்றாட்டைநம்புதலின்அமைதி

6 எதைப்பற்றியும் கவலைப்பட வேண்டாம். ஆனால், நன்றியோடு கூடிய இறை வேண்டல், மன்றாட்டு ஆகிய அனைத்தின் வழியாகவும் கடவுளிடம் உங்கள் விண்ணப்பங்களைத் தெரிவியுங்கள். 7 அப்பொழுது, அறிவெல்லாம் கடந்த இறை அமைதி கிறிஸ்து இயேசுவோடு இணைந்துள்ள உங்கள் உள்ளத்தையும் மனத்தையும் பாதுகாக்கும். (பிலிப்பியர் 4:6-7)

நாம் மன்றாடும் பொழுதெல்லாம், நாம் இந்த மூன்று விடயங்களை நினைவில் கொள்ள வேண்டும்.

நமக்கு சிறந்ததையே தேர்ந்து அளிக்கும், கடவுளின் அன்பை நாம் நினைவுக் கூற வேண்டும். இறைவனின் ஞானத்தை நாம் நினைவுக் கூற வேண்டும். நமக்கு சிறந்தது எது என்று இறைவனுக்கு மட்டுமே தெரியும். நமக்கு தலைச் சிறந்தது என்ன என்பதை வழிநடத்தும் இறைவனின் வல்லமையை நாம் நினைவுக் கூற வேண்டும். இறைவனின் அன்பில், ஞானம் மற்றும் வல்லமையில் விசுவாசத்துடனும் நம்பிக்கையுடனும் மன்றாடுபவர் இறை அமைதியை கண்டடைவர்.

இப்படிக்கு,

ஓய்வுப் பெற்ற.அருட்பணி.தந்தை.அகஃத்தின் வோங்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Church of the Holy Name of Mary is a Roman Catholic Church situated at Permatang Tinggi. Our mission is to share the Good News of the Kingdom of God to everyone. 

Resources