வளர்ந்திடும்திடம்

ஆண்டவரையும் அவரது ஆற்றலையும் தேடுங்கள்; அவரது திருமுகத்தை இடையறாது நாடுங்கள்! அவர் செய்த வியத்தகு செயல்களை நினைவு கூருங்கள்; அவர்தம் அருஞ்செயல்களையும் அவரது வாய் மொழிந்த நீதித்தீர்ப்புகளையும் நினைவில் கொள்ளுங்கள். (1 குறிப்பேடு 16: 11-12)

தோல்வியின் அச்சத்திற்கு நமக்குள் வழிவிடும் பொழுது வாழ்வின் முழு நலனையும் அடைந்திட நம்மால் முடியும். நற்செய்தி என்னவென்றால், தோல்வியைக் கண்டு அச்சம் கொள்ள நமக்கு காரணம் இல்லை. முதலாவது, இறைவனஅ உன்னோடு உள்ளார். இரண்டாவது, அமைதியில் விலக நீ முடிவெடுத்தால் தோல்வி என்பதற்கு வார்த்தை இல்லை.

அச்சம் கொள்ள நீங்கள் சோதிக்கப்படும் பொழுதெல்லாம், கடந்த காலங்களில் இறைவன் உங்களுடன் இருந்து உங்களுக்கு உதவியதை நினைத்து மகிழ்ந்திடுங்கள், மற்றும் அவர் உங்களுடன் இப்பொழுது இருப்பதை நினைவில் கொள்ளுங்கள். அவர் உங்களை தோற்கவும் விடமாட்டார்.. உங்களை கைவிடவும் மாட்டார். அவர் உங்கள் இறைவன். அவரின் கைகளில் உங்களை அவர் தாங்கி உங்களுக்கு உதவிடுவார். கடுமைகளை சந்திக்க அவர் உங்களை இறுக்குகிறார்.

கூடுதலாக, உறுதியில், வலுவில் மற்றும் குணங்களில்  நன்மையில் உழுத்தம் அளித்து உங்களை அவர் உருவாக்குகிறார். உங்களுக்கென அவர் வைத்திருப்பதுபின் வாங்காத திடத்தை அவர் உங்களில் வளர்க்கிறார்.

நமது விசுவாசத்தின் அளவை அழுத்தி விரிவுப்படுத்த இறைவன் கடுமையான சூழலை கடந்திட நம்மை அனுமதிக்கிறார். இறைவனில் நீங்கள் மாபெரும் நம்பிக்கை வைத்தால், உங்கள் வாழ்வில் மாபெரும் விடயங்களை முழுமையாக்கிட உங்களால் முடியும்.   

நன்றியின் மன்றாட்டு

இறைவா, தோல்வியின் பயத்தை நான் உணர துவங்கும் வேளையான சூழலில் இருக்கையில்,

அந்த உணர்வுக்கு நான் கையளிக்காமல் இருக்க வழி செய்த உமக்கு நன்றி.

பின்வாங்குவதற்கு பதிலாக திடமாக நின்று எதிர்க்கொள்ள உதவியமைக்காக உமக்கு நன்றி

என்னுடன் நீர் இருப்பதற்காகவும் மற்றும் நான் எதற்கும் அச்சப்படாமலிப்பதற்கும் உமக்கு நன்று.

இப்படிக்கு,

பணி ஓய்வுப் பெற்ற அருட்பணி.தந்தை.அகஃத்தின் வோங்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Church of the Holy Name of Mary is a Roman Catholic Church situated at Permatang Tinggi. Our mission is to share the Good News of the Kingdom of God to everyone. 

Resources