ஒருபுதியதிருவழிப்பாடுஆண்டு

இன்று, திருவருகைக் காலத்தின் முதல் ஞாயிறு, நாம் ஒரு புதிய திருவழிப்பாட்டு ஆண்டை தொடங்குகிறோம். 1.12.24 – 30.11.25. திருவழிப்பாடு ஆண்டு என்பது, நாம் செவிமடுக்கும் மற்றும் கேட்கும், “ஆண்டவர் எத்துணை இனியவர் என்று சுவைத்துப் பாருங்கள்.” திருப்பாடல்கள் 34:8 - தினசரி திருப்பலியின் ஒரு முழு நீள ஆண்டுக்கான ஒரு உருவாக்கப் பயிற்சியாகும்.

இந்த ஒரு ஆண்டு அடிப்படையில், நாம் ஆண்டவர் இயேசு கிறித்துவின் பிறப்பு, போதித்தலின் பொதுப்பணி, குணமளிப்பு மற்றும் தீய வல்லமைகளை வெளியேற்றல், இறப்பு, உயிர்ப்பு, விண்ணேற்றம், தமது தூய கத்தோலிக்க திருஅவையின் மாபெரும் தொடக்கமும் மற்றும் தமது தூய ஆவியைப் பொழிதல்.

ஆண்டவர் எத்துணை இனியவர் என்று சுவைத்துப் பாருங்கள்.” திருப்பாடல்கள் 34:8 …

இதனைத் வழித் தொடர்ந்து, நாம் மாபெரும் நம்பிக்கையின் உதாரணங்களை, தூயவர்களின் திருவிழாக்களை நினைவுக் கூறுகிறோம்.

இறைவனில் அவர்களின் எதிர்நோக்கும் நம்பிக்கையும், மற்றும் உலகில் அவர்களின் வாழ்வில் இறைவனின் வல்லமையால் நாம் தூண்டப் பெற்று மற்றும் திடப்படுத்தப்படுவோமாக.   

இந்த புதிய திருவழிப்பாட்டு ஆண்டில், நற்செய்தி வாசகம் பெரும்பாலும் தூய லூக்கா நற்செய்தியிருந்து வாசிக்கப்படும்.

தூய லூக்காவின் பார்வையிருந்து நற்செய்தி ஒரு கண்ணோட்டம்

1.எழுதுனர்: லூக்கா, புறவினத்து கிறித்துவர், மருத்துவர் மற்றும் தூய பவுலின் சீடர்.

2.எழுதப்பட்ட திகதி : கிறித்துவுக்குப் பின் 60.

3.பார்வையாளர் : புறவினத்து கிறித்துவர்.

4.அடையாளம் : காளை. காளை பலியின் அடையாளம். தூய லூக்கா இயேசுவை உலகம்    அனைத்திற்கும் பலியாக கண்டார்.

5.குறிப்பான வலியுறுத்தல்.

a.மன்றாட்டின் வலியுறுத்தல்.

b.தூய ஆவியின் பணி.

c.கடவுளின் கொடைக்காக புகழ்ச்சி மற்றும் நன்றிக்கூறல்.

d.மரியா, விசுவாத்தின் முன்மாதிரி

ஆண்டவரே, உமது சொற்படி உம் அடியான் என்னை இப்போது அமைதியுடன் போகச் செய்கிறீர். ஏனெனில் மக்கள் அனைவரும் காணுமாறு, நீர் ஏற்பாடு செய்துள்ள உமது மீட்பை என் கண்கள் கண்டுகொண்டன.” லூக்கா 2:29-30

இப்படிக்கு,

பணி ஓய்வுப் பெற்ற அருட்பணி.அகஃத்தின் வோங்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Church of the Holy Name of Mary is a Roman Catholic Church situated at Permatang Tinggi. Our mission is to share the Good News of the Kingdom of God to everyone. 

About us

Resources