1.புதன் 29.1.2025 சீனப் புது ஆண்டு நாள்
“ஆண்டவர் தோற்றவித்த வெற்றியின் நாள் இதுவே; இன்று அக்களிப்போம்;
அகமகிழ்வோம்.” திருப்பாடல்கள் 118:24
காலை 9.00 – நன்றியறிதல் திருப்பலி
முன்னோர்களுக்கு மரியாதை செலுத்தல்.
ஆரஞ்சு பழங்கள் மற்றும் பண அன்பளிப்பு வழங்கல்.
“நான் உனக்குக் கட்டளையிடவில்லையா? வீறுகொள்! துணிந்து நில்! அஞ்சாதே!
கவலைப்படாதே! ஏனெனில் உன் கடவுளும் ஆண்டவருமான நான் நீ செல்லும் இடம்
எல்லாம் உன்னோடு இருப்பேன்.” யோசுவா 1:9
2. ஞாயிறு 2.2.2025
“ஆண்டவர் உனக்கு ஆசி வழங்கி உன்னைக் காப்பாராக!” எண்ணிக்கை 6:24
உங்கள் உழைப்பிலும், உங்கள் கரங்களின்
செயல்பாட்டிலும் வெற்றியை அளிப்பீராக.
காலை 8.30 தொழிலில் பாதூகாப்பும் மற்றும்
வெற்றிக்காகவும் மன்றாடல்.
வருகைப் பாடலுக்கு முன்பதாக, மெழுகுவர்த்திகளை
ஆசீரளித்து பற்ற வைத்தல்.
“உலகின் ஒளி” யோவான் 8:12
தொழிலை தொடங்க பண அன்பளிப்பு வழங்கல்.
“இந்தத் திருச்சட்ட நூலை உன் முன்னின்று அகற்றாதே.
இரவும் பகலும் இதனைத் தியானம் செய்து, இதில்
எழுதியுள்ள அனைத்தையும் கடைப்பிடிப்பதில் கவனமாய்
இரு. அப்பொழுது தான் நீ செல்லும் இடம்எல்;லாம் நலம்
பெறுவாய்; வெற்றி காண்பாய்.” யோசுவா 1:8
இப்படிக்கு
பணி ஓய்வுப் பெற்ற அருட்.பணி.தந்தை.அகஃத்தின் வோங்
Church of the Holy Name of Mary is a Roman Catholic Church situated at Permatang Tinggi. Our mission is to share the Good News of the Kingdom of God to everyone.