“19 பின்பு அவர் அப்பத்தை எடுத்துக் கடவுளுக்கு நன்றி செலுத்தி, அதைப் பிட்டு, அவர்களுக்குக் கொடுத்து, “இது உங்களுக்காகக் கொடுக்கப்படும் எனது உடல். எனது நினைவாக இவ்வாறு செய்யுங்கள்” என்றார். 20 அப்படியே உணவு அருந்திய பின்பு அவர் கிண்ணத்தை எடுத்து, “இந்தக் கிண்ணம் உங்களுக்காகச் சிந்தப்படுகிற எனது இரத்தத்தால் நிலைப்படுத்தப்படும் புதிய உடன்படிக்கை.” (லூக்கா 22:19-20)
நினைவு கூர்தல், “அவரின் இறப்பு மற்றும் உயிர்ப்பின் நினைவு” நற்கருணை மன்றாட்டு II-னது, அது நினைவுப்படுத்துவதை நிகழ்த்தி கொண்டிருப்பதாகும். சிலுவையில் இயேசு நம் அனைவருக்காகவும் அவர் அளித்த மாபெரும் தியாகமாகும்.
திருப்பலிக்கு முன் மன்றாட்டு.
என்றுமுள்ள தந்தையே, உமது அன்பு மகன் இயேசுவின் உடலையும் மற்றும் இரத்தத்தையும், ஆன்மாவையும் இறையையும் உலக பாவங்களுக்காகவும்…….
தூய நற்கருணைக்குப் பின் மன்றாட்டு.
ஆண்டவராகிய இயேசுக்கு கிறித்துவே, என் இதயத்தினுள்ளும் வாழ்விலும் வாரும்.
நீரே என் ஆண்டவர் மற்றும் இறைவன். நாம் உம்மை வணங்குகிறேன்.
உமக்கு நன்றி நவில்கிரேன். உம்மை புகழ்கிறேன். எனக்காக அளிக்கப்பட்டு சிந்தப்படட உமது உடலுக்காகவும் மற்றும் இரத்திற்காகவும் நான் உமக்கு நன்றி செலுத்துகிறேன். என்னை நலமாகவும் மற்றும் திடமாகவும் நிலைக்க உமது உடல் எனக்கு வளம் தருவதாக. என்னை எண்ணத்திலும் உடலிலும் நலம் அளித்து மீட்க உமது இரத்தம் என் உடல் முழுவதும் ஊடுருவதாக. உமது உடலை உண்டு உமது இரத்தத்தை பருகும் வேளையில், உமது இரத்தத்தினால் தடவப்படட என் இதழானது, தீயோனின் ஆபத்துகளிலிருந்து மற்றும் அச்சுறுத்தலிலிருந்தும் என்னை காத்து, என் உணவு மற்றும் பனத்திலிருக்கும் மற்றும் நான் உள் வாங்கும் மூச்சு காற்றில் இருக்கும் நஞ்சிலிருந்து என்னை காப்பதாக. நான் செயல் புரியும் அனைத்திலும் வளமை மற்றும் வெற்றி பெற தூய ஆவியின் கொடைகளாலும் மற்றும் வளமையிலும் ஆண்டவரே என்னை நிரப்பும்.
ஆண்டவரே, உமது போதனைக்கு நான் நம்பிக்கையாய் நிலைத்திட என்னை வழிநடத்தும். உம்மிடமிருந்து நான் பிரிய விடாதேயும். ஆமென்.
இப்படிக்கு,
பணி ஓய்வு பெற்ற அருட்பணி.தந்தை.அகத்தின் வோங்
Church of the Holy Name of Mary is a Roman Catholic Church situated at Permatang Tinggi. Our mission is to share the Good News of the Kingdom of God to everyone.