தவக்காலத்தின் 5-ம் ஞாயிறு 

33 மரியா அழுவதையும், அவரோடு வந்த யூதர்கள் அழுவதையும் கண்டபோது இயேசு உள்ளங் குமுறிக் கலங்கி, 34 "அவனை எங்கே வைத்தீர்கள்?" என்று கேட்டார். அவர்கள் அவரிடம், "ஆண்டவரே, வந்து பாரும்" என்றார்கள். 35 அப்போது இயேசு கண்ணீர் விட்டு அழுதார். 36 அதைக் கண்ட யூதர்கள், "பாருங்கள், இலாசர்மேல் இவருக்கு எத்துணை அன்பு!" என்று பேசிக் கொண்டார்கள். 37 ஆனால் அவர்களுள் சிலர், "பார்வையற்றவருக்குப் பார்வையளித்த இவர் இவரைச் சாகாமலிருக்கச் செய்ய இயலவில்லையா?" என்று கேட்டனர்.” (யோவான் 11:33-37)

அழுவதையும் புலம்புவதையும் கண்ணுற்ற இயேசு, தாமும் புலம்பினார். நமது துயரங்களில் இயேசுவும்  நம்மோடு பங்குற்று புலம்புவதை இது வெளிப்படுத்துகிறது. இங்கே நாம் இயேசுவின் பற்பல குணநலன்களை காண்கிறோம். இரக்கம், சீற்றம், கோபம், துக்கம், மற்றும் விரக்தி. இந்த மண்ணக வாழ்வில், இயேசு பலமுறை தம் ஆழ்ந்த வெளிப்பாடுகளை வெளிப்படுத்தியுள்ளார். அவர் மக்களை புரிந்துள்ளார். ஏனெனில் அவர் அவர்களை உணர்ந்துள்ளார். உங்கள் மீட்பரிடம் நேர்மையாக இருந்து எதையும் மறைத்திட முயலாதீர்கள். ஏனெனில் அவர் உங்கள் மீது அக்கறை கொண்டுள்ளார். 

“15 ஏனெனில், நம் தலைமைக் குரு நம்முடைய வலுவின்மையைக் கண்டு இரக்கம் காட்ட இயலாதவர் அல்ல; மாறாக, எல்லா வகையிலும் நம்மைப்போலச் சோதிக்கப்பட்டவர்; எனினும் பாவம் செய்யாதவர்.

16 எனவே, நாம் இரக்கத்தைப் பெறவும், ஏற்ற வேளையில் உதவக் கூடிய அருளைக் கண்டடையவும், அருள் நிறைந்த இறை அரியணையைத் துணிவுடன் அணுகிச் செல்வோமாக.” (எபிரேயர் 4:15-16)

இப்படிக்கு,

பணி ஓய்வுப் பெற்ற அருட்பணி.தந்தை அகத்தின் வோங்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Church of the Holy Name of Mary is a Roman Catholic Church situated at Permatang Tinggi. Our mission is to share the Good News of the Kingdom of God to everyone. 

About us

Resources