எண்ண நினைவலைகளை வளர்த்துக் கொள்வது என்பது மிகவும் முக்கியமான ஒன்று. இறைவன் நாம் கேட்பதய் கண்டிப்பாய் நிறைவேற்றி தருவார் என்று நம்பி அவருக்கு அதற்காக நாம் என்றும் நன்றி கூற வேண்டும்.
திருவிவிலியம் முழுவதுமாக, தம் பிள்ளைகளுக்காக இறைவன் தம் வாக்குறுதியை நிறைவேற்றுகிறார் என காண முடிகிறது. உண்மையிலே, பழைய ஏற்பாட்டில் எபிரேயத்தில் இறைவனுடைய பெயர் “யாவே யீரே” என்பதாகும். அப்படி என்றால், இறைவன் அளிக்கிறார் என்பது பொருளாகும். நீங்களும் நானும் இறைவனின் பிள்ளைகள். அவரே நம் தந்தை. ஒரு இயற்கை பெற்றோர் பெற்றோர் தம் பிள்ளைகளுக்கு அளித்து மகிழ்வது போல், ஆண்டவர் நமக்கு அளிக்கும் போது மகிழ்கிறார்.
தெளிவாக, விண்ணகம் மற்றும் மண்ணகத்தின் அனைத்து மூலமும் மற்றும் யாவும் யாவுமே விண்ணக தந்தையின் படைப்பே. ஆகவே, அவரால் நமக்கு அளிக்க இயலாது என்பது எதுவுமே கிடையாது. அவர் நம்மை அன்பு செய்கிறார். அவர் நமக்கு அளிக்கவும் பாதுகாக்கவும் விரும்புகிறார்.
மெய் கூற்றாக, தம் பிள்ளைகளுக்கு அளிக்கும் ஆசீரை விட வேறு யாருக்கும் அவர் பகிர விருப்பமில்லை. நீங்கள் கேட்கும் யாவும், இப்பொழுதே உங்கள் வழியில் வந்து கொண்டிருக்கிறது என்பதை உணர்ந்து, அறிந்து, அவரே இதை உங்களுக்கு நிகழ்த்துகிறார் என்பதிற்க்காக நன்றி கூறி கொண்டே இருங்கள்.
நன்றியினை மன்றாட்டு.
விண்ணக தந்தையே,
நீரே அளிக்கும் இறைவனாய் இருப்பதால் நான் உமக்கு நன்றி கூறுகிறேன்.
நான் என் சூழல் எதுவாக இருந்தாலும் அதை கவனிப்பதை விட, உம்மை நோக்குவதும், கவனிப்பதில் நிலையாய் இருந்து, நான் கேட்கும் ஒவ்வொன்றையும் அதன் நேரத்திற்கு ஏற்றபடி நிறைவாக தந்து கொண்டிருப்பதற்காக நன்றி.
இப்படிக்கு,
பணி ஓய்வுப் பெற்ற அருட்.பணி.தந்தை.அகத்தின் வோங்
Church of the Holy Name of Mary is a Roman Catholic Church situated at Permatang Tinggi. Our mission is to share the Good News of the Kingdom of God to everyone.