தவக்காலத்தின்முதலாம்ஞாயிறு

அலகை இயேசுவை சோதித்தல்

இயேசு இறைவனின் வார்த்தையை பயன்படுத்தி வென்றார்.

  1. சோதிக்கிறவன் அவரை அணுகி, “நீர் இறைமகன் என்றால் இந்தக் கற்கள் அப்பமாகும்படிக் கட்டளையிடும்என்றான். அவர் மறுமொழியாக; “‘மனிதர் அப்பத்தினால் மட்டுமல்ல; மாறாக, கடவுளின் வாய்ச்சொல் ஒவ்வொன்றாலும் வாழ்வர்என மறைநூலில் எழுதியுள்ளதேஎன்றார். (மத்தேயு 4:3-4).
  2. பின்னர் அலகை அவரை எருசலேம் திருநகரத்திற்குக் கூட்டிச் சென்றது. கோவிலின் உயர்ந்த பகுதியில் அவரை நிறுத்தி,”;நீர் இறைமகன் என்றால் கீழே குதியும்; ‘கடவுள் தம் தூதருக்கு உம்மைக் குறித்துக் கட்டளையிடுவார். உமது கால் கல்லில் மோதாதபடி அவர்கள் தங்கள் கைகளில் உம்மைத் தாங்கிக் கொள்வார்கள்என்று மறைநூலில் எழுதியுள்ளதுஎன்று அலகை அவரிடம் சொன்னது. இயேசு அதனிடம்: “‘உன் கடவுளாகிய ஆண்டவரைச் சோதிக்கவேண்டாம்எனவும் எழுதியுள்ளதேஎன்று சொன்னார். (மத்தேயு 4:5-7).
  3. அவரிடம், “நீர் நெடுஞ்சாண் கிடையாக விழுந்து என்னை வணங்கினால், இவை அனைத்தையும் உமக்குத் தருவேன்என்றது. அப்பொழுது இயேசு அதனைப் பார்த்து, “அகன்று போ, சாத்தானே,’உன் கடவுளாகிய ஆண்டவரை வணங்கி, அவர் ஒருவருக்கே பணி செய்என்றும் மறைநூலில் எழுதியுள்ளதுஎன்றார். (மத்தேயு 4:9-10).

 

அலகையின் சோதனைக்கு இறைவார்த்தையை அறிந்து அதை பயன்படுத்துவதன் முக்கியதுவத்தையும் செயல்திறனின் அவசியத்தையும் வெளிப்படுத்துகிறார். நாமும் இதை அப்படியே நிகழ்த்த முடியும்.

மனிதர்களை முழுமையாக அடையாளம் காண, இயேசு கடவுளாகவே இருந்தாலும், அவரும் மனிதன் தான். ஆகவே அவர் அவகையின் சோதனையை எதிர்கொள்ள வேண்டும். ஒரு முழு மனிதனாக, இயேசு அலகையின் சோதனையிலிருந்து விடுப்பாட்டாரில்லை. எனேனில், இயேசு சோதனைகளை சந்தித்து அதனை மேற்க்கொண்டார்அவர் நமக்கு இந்த இரண்டு வழிகளில் உதவிட முடியும்.

  • பாவம் செய்யாமல் சோதனைகளை மேற்க்கொள்ள முன்மாதிரி
  • “ஏனெனில், நம் தலைமைக் குரு நம்முடைய வலுவின்மையைக் கண்டு இரக்கம் காட்ட இயலாதவர் அல்ல; மாறாக, எல்லா வகையிலும் நம்மைப்போலச் சோதிக்கப்பட்டவர்; எனினும் பாவம் செய்யாதவர். எனவே, நாம் இரக்கத்தைப் பெறவும், ஏற்ற வேளையில் உதவக் கூடிய அருளைக் கண்டடையவும், அருள் நிறைந்த இறை அரியணையைத் துணிவுடன் அணுகிச் செல்வோமாக.” (எபிரேயர் 4:15-16).

 

உமது வார்த்தை (உதாரணத்திற்கு, பத்துக் கட்டளைகள் விப 20:2-17) என் காலடிக்கு உம் வாக்கே விளக்கு! என் பாதைக்கு ஒளியும் அதுவே!” (திபா 119:105).

எங்களை சோதனைக்கு உட்படுத்தாதேயும் என மன்றாடும் பொழுது நாம் பாவத்தின் வழியையும் தடத்தையும் நோக்கி வழிநடத்த வேண்டாம் என்று இறைவனிடம் கேட்கிறோம். இந்த வேண்டலானது சீடத்துவத்தையும் திடத்தையும் உள்ளடக்கி மன்றாடப்படுகின்றது.

இப்படிக்கு,

ஒய்வுப் பெற்ற அருட்பணி,தந்தை.அகஃத்தின் வோங்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Church of the Holy Name of Mary is a Roman Catholic Church situated at Permatang Tinggi. Our mission is to share the Good News of the Kingdom of God to everyone. 

Resources