அப்போது ஒரு மேகம் வந்து அவர்கள்மேல் நிழலிட அந்த மேகத்தினின்று, “என் அன்பார்ந்த மைந்தர் இவரே; இவருக்குச் செவிசாயுங்கள்” என்று ஒரு குரல் ஒலித்தது. (மாற்கு 9:7).
“இவருக்குச் செவிசாயுங்கள்” 6 நாட்களுக்கு முன்பதாக இயேசு சொன்னதற்கு செவிமடுங்கள். அந்த இயேசு பாடுபடும் மெசியா. ஆனால், சூடர்களால் இதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
“மானிடமகன் (தம்மைக் குறிப்பிட இயேசு பயன்படுத்தும் தலைப்பு) பலவாறு துன்பப்படவும் மூப்பர்கள், தலைமைக் குருக்கள், மறைநூல் அறிஞர்கள் ஆகியோரால் உதறித் தள்ளப்பட்டுக் கொலை செய்யப்படவும் மூன்று நாள்களுக்குப்பின் உயிர்த்தெழவும் வேண்டும்” என்று இயேசு அவர்களுக்குக் கற்பிக்கத் தொடங்கினார். (மாற்கு 8:31).
இசுராயேலைரை உரோமையினரின் ஆதிக்கத்திலிருந்து விடுவித்து அதன் பிறகு அவர்களின் அரசராக அவர் வருவதை இவர்கள் விரும்பினர். யாக்கோபும் யோவானும் கூட இயேசுவின் முதன்மை அமைச்சராகவும் துணை முதன்மை அமைச்சகராகவும் விரும்பி இயேசுவின் பரிந்துரையை நாடினர். “அவர்கள் அவரை நோக்கி, நீர் அரியணையில் இருக்கும் போது எங்களுள் ஒருவர் உமது வலப்புறமும் இன்னொருவர் உமது இடப்புறமும் அமர்ந்து கொள்ள எங்களுக்கு அருளும்” என்று வேண்டினர். (மாற்கு 10:37).
இந்த நிகழ்வு உயிர்ப்பிற்கு பின்பும், பெந்தகோத்து முன்பு வரை நடைப்பெற்றது. பின்பு அங்கே கூடியிருந்தவர்கள் அவரிடம், “ஆண்டவரே, இஸ்ராயேலுக்கு ஆட்சியுரிமையை மீண்டும் பெற்றுத்தரும் காலம் இதுதானோ?” என்று கேட்டார்கள். (திப 1:6).
“மானிடமகன் பலவாறு துன்பப்படவும் மூப்பர்கள், தலைமைக் குருக்கள், மறைநூல் அறிஞர்கள் ஆகியோரால் உதறித் தள்ளப்பட்டுக் கொலை செய்யப்படவும் மூன்று நாள்களுக்குப்பின் உயிர்த்தெழவும் வேண்டும்” என்று இயேசு அவர்களுக்குக் கற்பிக்கத் தொடங்கினார். (மாற்கு 8:31). தங்களின் மெசியா பாடுகள் பட வேண்டும் என இயேசு கூறியதை உள்வாங்கிக் கொள்ள சீடர்களுக்கு கடினமாக இருந்தது.
கிறித்துவ வாழ்வு என்பது வளத்திற்கும் எளிமைக்கும் வழிவகுக்கும் ஒரு நடைப்பாதை அல்ல. மாறாக, அது கடின உழைப்பு, பாடுகள், பற்றாக்குறைகள் மற்றும் ஆழமான துன்பங்களை உள்ளடக்கியது.
“அன்புக்குரியவர்களே, துன்பத்தீயில் நீங்கள் சோதிக்கப்படும்போது, ஏதோ எதிர்பாராதது நேர்ந்துவிட்டதென வியக்காதீர்கள். மாறாக, கிறிஸ்துவின் துன்பங்களில் நீங்கள் இத்துணை பங்கு கொள்கிறீர்கள் என எண்ணி மகிழுங்கள். அப்பொழுது கிறிஸ்துவின் மாட்சி வெளிப்படும் வேளையில் இன்னும் மகிழ்ந்து பேருவகை கொள்வீர்கள்.” (1 பேதுரு 4:12-13).
“ஆகவே கடவுளின் திருவுளப்படி துன்பப்படுகிறவர்கள் நன்மை செய்வதில் நிலைத்திருந்து படைத்தவரிடம் தங்களை ஒப்படைப்பார்களாக! அவர் நம்பத்தக்கவர்.” (1 பேதுரு 4:19).
“உலகில் உங்களுக்குத் துன்பம் உண்டு, எனினும் துணிவுடன் இருங்கள். நான் உலகின்மீது வெற்றி கொண்டுவிட்டேன்” என்றார்.” (யோவான் 16:33).
இப்படிக்கு,
ஓய்வுப் பெற்ற அருட்பணி.அகஃத்தின் வோங்
Church of the Holy Name of Mary is a Roman Catholic Church situated at Permatang Tinggi. Our mission is to share the Good News of the Kingdom of God to everyone.