“பின்பு அவர்கள் தொழுகைக் கூடத்தை விட்டு வெளியே வந்து யாக்கோபு, யோவானுடன் சீமோன், அந்திரேயா ஆகியோரின் வீட்டிற்குள் சென்றார்கள்.சீமோனுடைய மாமியார் காய்ச்சலாய்க் கிடந்தார். உடனே அவர்கள் அதைப் பற்றி இயேசுவிடம் சொன்னார்கள். இயேசு அவரருகில் சென்று கையைப் பிடித்து அவரைத் தூக்கினார். காய்ச்சல் அவரை விட்டு நீங்கிற்று. அவர் அவர்களுக்குப் பணிவிடை செய்தார்.” (மாற்கு 1:29-31).
சீடர்கள் இயேசுவை நெடுநாள் அறியவில்லை. ஆயினும் அவர்களின் குழப்பங்கள் அனைத்தையும் அவரிடம் ஒப்படைத்தனர். பேதுருவின் மாமியார் காய்ச்சலாய் கிடந்தார். ஆகவே, உலகின் வழக்கமாக இயேசுவிடம் அதைக் கூறினர். ஆகவே தொடக்கதிரே இதைக் கண்டவர்கள் தையே பின்னர் ஒரு வழக்கமாக எடுத்துக்கொண்டனர். அவர்களின் அனைத்து குழப்பங்களையும் அவரிடம் ஒப்படைத்து அவரி உதவியை நாடுவதாயிருந்தனர். பேதுருவின் மாமியார் குணம்பெற்ற பின் அவர் இயேதுவுக்கும் அவரின் தீடர்களுக்கும் உணவு தயார்படுத்தி அவர்களுக்கு பணிவிடை புரிந்தார். நாம் பிறருக்கு உதவிச் செய்திடவே இயேசு நமக்கு உதவிப் புரிகிறார்.
இயேசு பலரை குணமாக்கினார்.
“பல்வேறு பிணிகளால் வருந்திய பலரை அவர் குணப்படுத்தினார். பல பேய்களையும் ஓட்டினார்; அந்தப் பேய்கள் அவரை அறிந்திருந்ததால் அவற்றை அவர் பேசவிடவில்லை.” (மாற்கு 1:34).
தம் மக்களின் மத்தயில் செயல்படக் கூடிய எல்லாம் வல்ல வல்லமையை உள்ளக்கிடயது கண்டிப்பாக கடவுளின் வல்லமையாக மட்டுமே இருக்க முடியும். தூய மாற்குவிற்கு, குணமளிப்பதும் தீய வல்லமைகளை வெளியற்றுவதும் இயேசுவின் பணிகளில் முக்கியமானதும் நடுநிலைப் பெற்றதுமாக காணப்பட்டது. இவை அனைத்தும் அவரின் ஒலி–ஒளித் துணைக்கலங்களாக காணப்பட்டன. இறையரசை உண்மையானயாதாகவும் வெளிப்படையானதகாவும் வெளிப்படுத்தின. நற்செய்தியின் அரிவிப்பில் இநைகள் பிரிவைக் காணைத இணைப்பாக இயேதுவுக்கும் அவரின் சீடர்களுக்கும் விளங்கின.
பேதுருவின் இல்லத்தில் நீண்ட நேரம் நடந்த குணமளிப்பிற்கு பின் கிடைத்த அமைதியான நேரம்.
“இயேசு விடியற்காலைக் கருக்கலில் எழுந்து தனிமையான ஓர் இடத்திற்குப் புறப்பட்டுச் சென்றார். அங்கே அவர் இறைவனிடம் வேண்டிக் கொண்டிருந்தார்.” (மாற்கு 1:35).
பேதுருவின் இல்லத்தில் நிகழ்ந்த நீண்ட நேர குணமளிப்பிற்கும் பின்னும் இயேசு அடுத்த நாளை அதிகாலையில் எழுந்து மன்றாடுவதற்கு ஒரு தனிமையான இடத்த கண்டார். வல்லமை உள்ளவராக இருப்பினும், இயேசு ஒரு எளிமையான மனிதராக இறைவனிடமிருந்து வழிக்காட்டலை வேண்டுகிறார். மன்றாடல் இயேசுவுக்கு முக்கியமான ஒன்றாக இருப்பின், இயேசுவின் சீடர்களுக்கும் இசு அவசியமான ஒன்றகவே உள்ளது. மன்றாடுங்கள். அதிகாலையில் எழுந்து இதைச் செய்வதாயினும் இதை செயல்படுத்துங்கள்.
இப்படிக்கு,
பணி ஓய்வுப் பெற்ற அருட்பணி.தந்தை.அகஃத்தின் வோங்
Church of the Holy Name of Mary is a Roman Catholic Church situated at Permatang Tinggi. Our mission is to share the Good News of the Kingdom of God to everyone.