நீங்கள் கடவுளுடன் ஏமாற்றம் கண்டுள்ளீர்களா?

"மண்ணுலகத்திலிருந்து விண்ணுலகம் மிக உயர்ந்து இருப்பதுபோல உங்கள் வழிமுறைகளைவிட என் வழிமுறைகளும், உங்கள் எண்ணங்களைவிட என் எண்ணங்களும் மிக உயர்ந்திருக்கின்றன." (எசாயா 55:9)

உங்கள் வாழ்வில் இறைவன் உங்களை கை விட்டார் என்பதை நீங்கள் உணர்ந்த நேரம் இருக்கலாம். அல்லது அவரின் வாக்குறுதி உங்களை வந்தடையாமல் இருந்திருக்கலாம்.

நமது நேர கால அடடவனையிலோ அல்லது நமது விருப்பத்திற்கோ இறைவன் செயல் பட மாட்டார். இதை நீங்கள் உணர நான் உங்களை அழைக்கிறேன். 

அனால் நீங்கள் அவர் நம்பிட தொடர்ந்தீர்களானால் நீங்கள் இறைவனின் நன்மைத்தனத்தை உங்கள் வாழ்வில் காண்பீர்கள். இறைவனை நீங்கள் ஒவ்வொரு நாளும் நம்பினால், கடந்த நாள்களில் அவர் செய்த விடயங்களையும், பின்வாங்கமால் இருக்கும் முடிவையும், மற்றும் உங்கள் வாழ்வில் அவர் ஆற்றும் மாபெரும் நிகழ்வையும் நீங்கள் காண்பதை உணர்வீர்கள்.

இறைவனின் நம்பிக்கை அவரை சூழ்ந்துள்ளது. இது அவரின் குணங்களும் ஒன்று. அவர் நம்முடன் இருப்பதை நாம் உறுதி செய்யலாம். மற்றும் நமக்கான அவரின் வாக்குறுதிகளை நாம் காணலாம். கடந்த காலம் உங்களை பிடித்து வைக்க விடாதீர்கள். இறைவனில் இன்றே நம்பிக்கை கொள்ள துணிவு கொள்ளுங்கள். 

நன்றியின் மன்றாட்டு.

ஆண்டவராகிய இறைவா,

என்னுடைய வழியையும் மற்றும் தோல்விகள் ஏமாற்றத்தையும் நான் பின் தள்ளி உம்மை நம்பிக்கை கொள்ள எனக்கு உதவும். நான் உமது திடத்தை புரிந்து கொள்ள இயலா நிலையிலும் உமது திட்டம் என்பது மாபெரும் சிறந்தது. உமது நேர்மைக்காகவும் மற்றும் என் மீது உமது அன்புக்காகவும் உமக்கு நன்றி. ஆமென்.

இப்படிக்கு,

பணி ஓய்வு பெற்ற அருட்.பனி.தந்தை.அகத்தின் வோங்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Church of the Holy Name of Mary is a Roman Catholic Church situated at Permatang Tinggi. Our mission is to share the Good News of the Kingdom of God to everyone. 

About us

Resources