இறை அழைத்தல் ஞாயிறு

ஆண்டவர் தாமே நல்ல ஆயர். நாம் அவர் தம் ஆடுகள். பெறுதலுக்காகவும், வழிநடத்தலுக்காகவும் மற்றும் பாதூகாப்பிற்க்காகவும் நாம் அவரையே சாந்திருக்க வேண்டும்.

ஆண்டவரே என் ஆயர். எனக்கு வேண்டிய அனைத்தும் எனக்கு உள்ளது. 

1 ஆண்டவரே என் ஆயர்; எனக்கேதும் குறையில்லை.

2 பசும்புல் வெளிமீது எனை அவர் இளைப்பாறச் செய்வார்; அமைதியான நீர்நிலைகளுக்கு எனை அழைத்துச் செல்வார்.

3 அவர் எனக்குப் புத்துயிர் அளிப்பார்; தம் பெயர்க்கேற்ப எனை நீதிவழி நடத்திடுவார்;

4 மேலும், சாவின் இருள்சூழ் பள்ளத்தாக்கில் நான் நடக்க நேர்ந்தாலும், நீர் என்னோடு இருப்பதால் எத்தீங்கிற்கும் அஞ்சிடேன்; உம் கோலும் நெடுங்கழியும் என்னைத் தேற்றும்.

5 என்னுடைய எதிரிகளின் கண் முன்னே எனக்கொரு விருந்தினை ஏற்பாடு செய்கின்றீர்; என் தலையில் நறுமணத் தைலம் பூசுகின்றீர்; எனது பாத்திரம் நிரம்பி வழிகின்றது.

6 உண்மையாகவே, என் வாழ்நாள் எல்லாம் உம் அருள் நலமும் பேரன்பும் எனைப் புடைசூழ்ந்துவரும்; நானும் ஆண்டவரின் இல்லத்தில் நெடுநாள் வாழ்ந்திருப்பேன்.. Psalm 23. 

இப்படிக்கு,                                                                                                                       

பணி ஓய்வுப் பெற்ற அருட்.பணி.தந்தை.அகத்தின் வோங்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Church of the Holy Name of Mary is a Roman Catholic Church situated at Permatang Tinggi. Our mission is to share the Good News of the Kingdom of God to everyone. 

About us

Resources