செப்தெம்பர் 15, பெர்மாத்தாங் திங்கி
பினாங்கு மறைமாவட்டத்தில் அமைந்திருக்கும் மரியாவின் தூய பெயர், பெர்மாத்தாங் திங்கி பங்கு தனது 131-ம் ஆண்டு நிறைவு விழாவினை கடந்த 11 செப்தெம்பர் புதன் முதல் 14 சனி வரை நவநாள் திருப்பலியுடன் இரவு மணி 8.15-க்கு மூன்று இடங்களில் மூன்று தனி மொழிகளில் நிறைவேறியது. 15 ஞாயிறு அன்று திருவிழா திருப்பலி மாலை மணி 5- க்கு முன் கூறிய மூன்று தனி இடங்களில் நம்பிக்கையாளர் மன்றாட்டு வரை நடைபெற்றது… அதனை தொடர்ந்து, பங்கு தந்தையின் ஆலோசனை படி, ஆங்கில மொழியினரும் தமிழ் மொழியினரும் தத்தம் மொழி திருப்பலியை நிறைவேற்றிய அருட்பணியாளருடன் அர்ப்பணிக்கப்படவுள்ள புதிய ஆலயத்தில் பவனியாக உள் நுழைந்து
சீன மொழியினருடன் இரண்டாம் பகுதியை பன்முக திருப்பலியாக ஓய்வு பெற்ற அருட்பணி.அகத்தின் வோங், அருட்பணி.என்ட்ரு கூ, அருட்பணி.தோமசு லிம் OCD, அருட்பணி.சைமன் ஆனந்த் மற்றும் பங்கு தந்தை.அருட்பணி.லூயிசு லோய் உடன் ஒன்றிணைந்து கூட்டாக நிறைவேற்றினர். திருப்பலியை அடுத்து, பங்கு வளாகத்தை சுற்றி சுற்றுப்பவனியும் ஆலயத்தினுள் நற்கருணை ஆராதனையும் ஆசிரும் நடைபெற்றன. திருப்பலி நிறைவை தொடர்ந்து பங்கு தந்தையின் நன்றியுரையினை அடுத்து பங்கு மண்டபத்தில் நட்புறவு இரவு உணவும் தமிழ் மற்றும் சீன பாரம்பரிய முறையில் தயார் செய்யப்பட்டிருந்தன. இத்திருப்பலியில் சுமார் 1300- க்கும் அதிகமான இறை மக்கள் பங்கு பெற்று இறை ஆசீரோடு இல்லம் திரும்பினர்…
செய்தி,
ரோஜர் பிரிமுஸ்
மரியாவின் தூய பெயர் தேவாலயம், பெர்மாத்தாங் திங்கி
Church of the Holy Name of Mary is a Roman Catholic Church situated at Permatang Tinggi. Our mission is to share the Good News of the Kingdom of God to everyone.