“21 மக்களெல்லாரும் திருமுழுக்குப் பெறும் வேளையில் இயேசுவும் திருமுழுக்குப் பெற்று, இறைவனிடம் வேண்டிக் கொண்டிருந்தபோது வானம் திறந்தது. 22 தூய ஆவி புறா வடிவில் தோன்றி அவர்மீது இறங்கியது. அப்பொழுது, “என் அன்பார்ந்த மகன் நீயே, உன்பொருட்டு நான் பூரிப்படைகிறேன்” என்று வானத்திலிருந்து ஒரு குரல் ஒலித்தது.” (லூக்கா 3:21-22)
“10 திருடுவதற்கும் கொல்வதற்கும் அழிப்பதற்குமன்றித் திருடர் வேறெதற்கும் வருவதில்லை. ஆனால் நான் ஆடுகள் வாழ்வைப் பெறும்பொருட்டு, அதுவும் நிறைவாகப் பெறும் பொருட்டு வந்துள்ளேன்.” (யோவான் 10:10)
நமது காலை இறைவேண்டலில், புதிய மற்றும் இனிய நாளின் கொடைக்காக இறைவனுக்காக நன்றி கூறுவோம். அவர் நம்மை தூய ஆவியின் வல்லமையால் கொடைகளாலும் பசுமையாக நம்மை ஆட்கொண்டு, நாம் செயல் புரியும் அனைத்திலும் நாம் வளமையும் வெற்றியும் காண செய்வாராக. ஆமென்.
“17 அவர் மூலம் கடவுள் கூறியது; ‘இறுதி நாள்களில் நான் மாந்தர் யாவர் மேலும் என் ஆவியை பொழிந்தருள்வேன். உங்கள் புதல்வரும் புதல்வியரும் இறைவாக்கு உரைப்பர். உங்கள் இளைஞர்கள் காட்சிகளையும் உங்கள் முதியோர் கனவுகளையும் காண்பர்.” (திருத்தூதர் பணிகள் 2:17)
வாரும் தூய ஆவியே! எனக்கு நீர் தேவை!
இப்படிக்கு,
பணி ஓய்வுப் பெற்ற அருட்.பணி.தந்தை.அகத்தின் வோங்
Church of the Holy Name of Mary is a Roman Catholic Church situated at Permatang Tinggi. Our mission is to share the Good News of the Kingdom of God to everyone.